Vellore

News April 6, 2024

வேலூர்: 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்த நபர்

image

அணைக்கட்டு அடுத்த ராஜபுரத்தை சேர்ந்த மணி (26) என்பவர் நேற்று தனது கிராமத்தில் உள்ள சுமார் 100 அடி ஆழம் கொண்ட பொது கிணற்றை சுத்தம் செய்ய இறங்கியபோது கையில் காயம் ஏற்பட்டது. பின்பு அவரால் மேலே வர முடியவில்லை. அவருடைய அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .

News April 5, 2024

வேலூர் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

image

மக்களவைத் தேர்தல் முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த துணை ராணுவ படையினர் இன்று (ஏப்ரல்.5) வேலூர் சைதாப்பேட்டை ஆற்காடு சாலையில் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த அணி வகுப்பு ஊர்வலத்தை டிஎஸ்பி திருநாவுக்கரசு துவக்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் கலந்து கொண்டனர்.

News April 5, 2024

வேலூர் கோட்டை மைதானத்தில் பூமி பூஜை

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 10ஆம்தேதி வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற உள்ள பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதையொட்டி இன்று (ஏப்ரல் 5) கோட்டை மைதானத்தில் பந்தல் அமைக்க பூமி பூஜையை எம்பி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தொடங்கி வைத்தார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 5, 2024

வேலூர் முழுவதும் ஒரேநாளில் 9 வழக்கு பதிவு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (ஏப்ரல் 4) நடத்திய சோதனையில் கள்ளச்சாராயம் 60 லிட்டர், 77 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து 9 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

News April 4, 2024

தேர்தலை புறக்கணிக்க போவதாக ஆர்ப்பாட்டம்

image

காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த பாலேங்குப்பம் பஞ்சாயத்து கோடவார்பள்ளி காலனி பகுதியில் 75க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்குள்ள சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி இல்லை எனவே எங்களுக்கு சுடுகாட்டிற்கு தனி பாதை அமைத்து தரக்கோரி இன்று (ஏப்ரல் 4) கருப்பு கொடி ஏந்தி மக்களவை தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News April 4, 2024

இருசக்கர வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

image

வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் செல்வி (69). இவர் நேற்றிரவு ஓடை பிள்ளையார் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக் செல்வி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். பின்னர் அங்கு இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 4, 2024

வேலூர்: தமிழக, ஆந்திர போலீசார் ஆலோசனை

image

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் இன்று ( ஏப்ரல் 4) ஆந்திரா, தமிழக போலீசார் இணைந்து தேர்தலின் போது எவ்வித அசம்பாவிதமும் நடைப்பெறாமல் இருக்க மாநில எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்துதல், பணம் பரிமாற்றம் மற்றும் பரிசு பொருட்கள், கடத்துவதை தடுப்பது பற்றி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

வேலூர்: பைக் மீது கார் மோதி தொழிலாளி பலி

image

வேலூர் சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஷல்லிகுமார் (48), தொழிலாளி. இவர் கடந்த 27ஆம் தேதி தனது பைக்கில் சேண்பாக்கம் மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஷல்லிகுமாரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல் 3) இறந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!