Vellore

News September 25, 2024

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (செப்டம்பர் 24) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

News September 25, 2024

வேலூர் மாவட்டத்தில் 5 லட்சம் விதை பந்துகள் தூவும் பணி

image

வேலூர் மாவட்டத்தை பசுமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (செப்டம்பர் 25) காலை 9:30 மணி அளவில் பாகாயம் அருகே உள்ள மலைப்பகுதிகளில், குடியாத்தம் உள்ளி மலைப்பகுதியில் 5 லட்சம் விதை பந்துகள் தூவும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளார். இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

News September 24, 2024

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல்துறை காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் இன்று இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. இதில் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, வேலூர் தாலுக்கா, விரிஞ்சிபுரம், பாகாயம், அரியூர், வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு காவல் நிலையம் ஆகிய பகுதியில் இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. எண்-9498146020

News September 24, 2024

வேலூரில் மழைக்கு வாய்ப்பு

image

வேலூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

News September 24, 2024

வேலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் வேலூரில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே, வெளியே செல்லும்  பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூரில் இன்று மழை வருமா? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 24, 2024

வேலூர் நீதிமன்றத்தில் ரவுடி வசூர்ராஜா ஆஜர்

image

வேலூரை அடுத்த புதுவசூரை சேர்ந்தவர் ராஜா என்கிற வசூர்ராஜா (வயது 36). ரவுடியான இவர் குண்டர் சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வசூர்ராஜா வழிப்பறி வழக்கில் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள நீதிமன்றத்திற்கு நேற்று கோவையில் இருந்து பலத்த போலீஸ் காவலுடன் வேனில் வேலூர் அழைத்து வரப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் (அக்டோபர்) 9அம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

News September 24, 2024

வேலூரில் தற்கொலைக்கு தூண்டியதாக 5 பேர் கைது

image

வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(47). இவரிடம் 30 லட்சம் பணம் கேட்டு சிலர் மிரட்டி வந்துள்ளனர். இதையடுத்து கடந்த 19ம் தேதி தங்கராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்‌. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் தற்கொலைக்கு தூண்டியதாக புது வசூரை சேர்ந்த விக்ரம் (32), அருண்குமார் (22), நரேஷ் (35), இம்தியாஸ் (32), திலீப் (34) ஆகிய 5 பேரையும் நேற்று கைது செய்தனர்.

News September 24, 2024

வேலூர் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் குண்டாசில் கைது

image

வேலூர் மாவட்டம் டவுன் ரயில் நிலையம் பின்புறம் உள்ள சம்பத் நகரை சேர்ந்தவர் தாமோதரன் (28). இவர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி மதிவாணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பெயரில் தாமோதரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (செப்டம்பர் 23) உத்தரவிட்டார்.

News September 24, 2024

வேலூர் சிறையில் கைதிகளை உறவினர்கள் சந்திக்க நேரம் ஒதுக்கீடு

image

வேலூர் மத்திய சிறையில் உள்ள சிறை வாசிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களை காண முன்பதிவு செய்ய‌ 9042828723, 9345470409 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் எந்த நேரத்தில் பார்க்க வரலாம் என்பது குறித்து பதிவு செய்து தெரிவிக்கப்படும். இதில், குறிப்பாக 10 ஷிப்டுகளில் அளிக்கப்பட்டுள்ளது மேலும், நேர் காணல் வருபவர்கள் 45 நிமிடத்துக்கு முன்னதாக வரவேண்டும். என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 24, 2024

வேலூர் ஒரே நாளில் குவிந்த 450 மனுக்கள்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று (செப்டம்பர் 23) நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 450 மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.