Vellore

News September 29, 2024

வேலூர் இன்னும் சற்று நேரத்தில் நிறைவு விழா

image

கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் “வேலூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா” கோட்டை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு விழா இன்று செப்டம்பர் 29 மாலை 6 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடக்க உள்ளது. இதில் வேலூர் மாவட்ட மக்கள் வருகைதந்து நம் மண்ணின் கலைகளை கண்டு களித்து கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 29, 2024

வேலூர் காவல்துறை எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டத்தில் இணையதள குற்றங்கள் நடைபெறுவதை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் பொதுமக்கள் மர்ம நபர்களிடம் ஏமாந்து பணத்தை இழக்கின்றனர். குறிப்பாக பகுதி நேர வேலை, என மர்ம நபர்கள் மோசடி செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீப நாட்களாக குடும்ப உறுப்பினரை கடத்திவிட்டதாக ஏமாற்றி பணம் பறிக்கும் செயல்கள் நடப்பதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News September 29, 2024

காட்பாடியில் 1 1/2 கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

image

காட்பாடி காவல் நிலைய போலீசார் நேற்று காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து பணிகள் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவரிடம் 1. 1/2 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது இதை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் கோபாலபுரம் பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 28, 2024

கிராம சபை கூட்டம் கலெக்டர் தகவல்

image

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது இதைதொடர்ந்து, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் வருகிற அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று கூட்டப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

News September 27, 2024

வேலூர் மாவட்டத்தில் 56 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பல்வேறு இடங்களில் மதுபாட்டில் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க இன்று (செப்டம்பர் 27) மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 56 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

News September 27, 2024

வேலூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் அழைப்பு

image

கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் “வேலூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா” கோட்டை மைதானத்தில் நாளை செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் 400 கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளோடு நடைபெறவுள்ளது. எனவே வேலூர் மாவட்ட மக்கள் வருகைதந்து நம் மண்ணின் கலைகளை கண்டு களித்து கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News September 27, 2024

பள்ளிகொண்டா சாலையில் அரசு பேருந்து விபத்து

image

குடியாத்தத்தில் இருந்து வேலூர் செல்லும் அரசு பேருந்து பகல் 1:30 மணி அளவில் குடியாத்தத்தில் இருந்து வேலூருக்கு செல்லும் அரசு பேருந்து வேப்பூர் அடுத்து பாரத் பெட்ரோல் பங்க் அருகில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து பெட்ரோல் நிலையம் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்த விபத்து பேருந்தில் இருந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

News September 27, 2024

வேலூர் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றமாகும். மீறினால் மோட்டார் வாகன சட்டப்படி வாகன உரிமையாளர்/சிறுவரின் பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, வாகனத்தின் பதிவுச் சான்று ரத்து செய்யப்படும் என்பதை வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 27, 2024

வேலூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். இன்று காலை 10.00 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை வாயிலாகவும். தெரிவித்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News September 27, 2024

வேலூரில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெறுபவர்களின் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களின் வீடுகள், தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் சுகாதாரப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.