India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் காட்பாடி செம்பராயநல்லூர் ஊராட்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (நவம்பர் 15) “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தை தொடங்கி வைத்து தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இதில், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி, காட்பாடி ஒன்றியக்குழுத்தலைவர் வேல்முருகன், மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் நடந்த விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட குடியாத்தம், கள்ளுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார். குடியாத்தம் வட்டார கல்வி அலுவலர்கள் என்.பி.கண்ணன், கே.உஷாராணி, பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா பிரேம்குமாரி ஆகியோர் இவ்விருதை பெற்றுக்கொண்டனர்.
பவுர்ணமியையொட்டி வேலூர் மண்டலத்திலிருந்து இன்று திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். மேலும், சாமி தரிசனத்துக்கு பின்னர் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம். இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் உதயநிதி மாவட்டம் வாரியாக சென்று வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி ஆய்வு செய்கிறார். மக்களுடன் முதல்வர் திட்டம் உட்பட பல திட்டங்களின் தகுதி பெற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வேலூர் மாவட்டத்திற்கு முதல்முறையாக வருகை தருகிறார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 669 வாக்குச்சாவடி மையங்களில் நாளை நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர் நீக்குதல், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் www.voters.eci. gov.in என்ற இணையதளத்தின் மூலமாக பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ளலாம் எனவே பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ஒரு வந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு வேலூர் மண்டலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட அனைத்து பஸ்களின் மூலம் 6 கோடியே 51 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இதில் 276 சிறப்பு பஸ்கள் மூலம் 5 நாட்களில் 68 லட்சம் ரூபாய் கூடுதல் வருமானம் போக்குவரத்து கழகத்துக்கு கிடைத்துள்ளது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட வேலூர் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் இன்று (நவம்பர் 14) காலை 11 மணிக்கு காட்பாடி காந்திநகரில் உள்ள கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே வேலூர் கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என மின்வாரிய செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்டம் கீ.வ குப்பம் வேலம்பட்டு கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் புகைப்படம் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பலரும் அதைப் பார்வையிட்டனர்.
Sorry, no posts matched your criteria.