Vellore

News March 17, 2025

அங்கன்வாடியில் ரூ.24,200 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.அதிகபட்சம் 12ஆம் வகுப்பும் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்து கொள்ள கிளிக் <>செய்யவும்<<>>.

News March 17, 2025

வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

image

குடியாத்தம் அடுத்த நெட்டேரியை சேர்ந்தவர் பிச்சைமுத்து (50). இவரது மனைவி கவிதாவுடன் (45) இருசக்கர வாகனத்தில் லத்தேரி சென்று வரும் போது சென்றம்பள்ளி அருகே எதிரில் வந்த இரு சக்கரம் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் பிச்சைமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது மனைவி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இச்சம்பவம் குறித்து கே வி குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 17, 2025

வேலூரின் பெருமை வாணி ஜெயராம்

image

ஏழு சுவரங்களின் கான சரஸ்வதி என்று அழைக்கப்படும் வாணி ஜெயராம், 1945 ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தார்.1971ஆம் தொடங்கிய இவரின் இசைப்பயணத்தில் தமிழ் உட்பட 19 இந்திய மொழிகளில் 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.தேசிய விருது உட்பட 20க்கும் மேற்பட்ட விருதுகள் இவரின் கரங்களை அலங்கரித்துள்ளது.நித்தம் நித்தம் நெல்லு சோறு, பாரதி கண்ணம்மா போன்ற இவரின் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. ஷேர் செய்யுங்கள்

News March 16, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (மார்ச்.16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. இதில் பகுதிவாரியாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News March 16, 2025

ரயில் நிலைய கட்டமைப்பு தேவைகள் குறித்து கருத்து கேட்பு 

image

தெற்கு ரயில்வே வருடாந்திர ஆலோசனை கூட்டம் ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் ரயில் நிலைய கட்டமைப்பு தேவைகள், கோரிக்கைகள் குறித்து வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் மனுக்களை mpoffice@kathiranand.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 8754376662 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வேலூர் எம்பி கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

News March 16, 2025

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு: கொட்டிக்கிடக்கும் வேலை

image

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். வேலூரை சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஒரே நேரத்தில் 2 பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.

News March 16, 2025

டெங்கு காய்ச்சலால் 9-ம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு

image

வேலூரில் முடினாம்பட்டு கிராமத்தில் சிவானி என்ற 13 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுநீரகம், கணையம் மற்றும் நுரையீரல் போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News March 16, 2025

குடியாத்தம் அருகே கூலி தொழிலாளர் தற்கொலை

image

குடியாத்தம் அனங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த மணி (55) கூலி தொழிலாளர். இவர் நேற்று குடிப்பழக்கத்தில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அருகில் உள்ள தென்னந்தோப்பிற்கு சென்று மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலறிந்த குடியாத்தம் தாலுக்கா போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News March 16, 2025

வேலூர் நியாய விலை கடை பணியாளர்களுக்கு நாளை பயிற்சி

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் நாளை (மார்ச் 16)   காலை 11 மணியளவில் வேலூர் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில்  நியாய விலை கடையில் பணியாற்றும் விற்பனை  பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சியை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைக்க உள்ளார். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 15, 2025

வேலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய எல்லைக்கு உட்பட்ட ஊரக பகுதிகளில் புதிய வீடு கட்டுதல் வணிக கட்டிடங்கள் தொழிற்சாலை கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களை விரிவாக்கம் செய்தல் போன்றவற்றை அனுமதியின்றி மேற்கொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி கூறினார்.

error: Content is protected !!