India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூர் பிரிவு சார்பில் காட்பாடியில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் ஸ்டார் அகாடமி பேட்மிண்டன் பயிற்சி மையம் வரும் மே 1-ந் தேதி தொடங்கப்படுகிறது. இதில் 20 ஆண்கள், 20 பெண்கள் என மொத்தம் 40 பேருக்கு பேட்மிண்டன் விளையாட்டு பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான மாணவர்கள் தேர்வு நேற்று மாவட்ட விளையாட்டு மையத்தில் நடந்தது. ஷேர் பண்ணுங்க
குடியாத்தம் பகுதியை சேர்ந்த பீடி தொழிலாளி இலியாஸ் (54). கடந்த 2019-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குடியாத்தம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இலியாஸ்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா வருகிற மே மாதம் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஏனையோர் கலந்து கொள்ள வசதியாக மே 15 அன்று உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். அதற்கு பதிலாக ஜூன் 14-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 28) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா வருகிற மே மாதம் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஏனையோர் கலந்து கொள்ள வசதியாக மே 15 அன்று உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். அதற்கு பதிலாக ஜூன் 14-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். *நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்*
Weekendல் ஜாலியாக பைக் ரைடு அல்லது ட்ரெக்கிங் போக சிறந்த இடமாக பாலமதி மலை உள்ளது. மேகங்களால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலையில் செம்மீசைச் சின்னான், பச்சைப் பஞ்சுருட்டான,மைனா, வெள்ளை-தொண்டை மீன்கொத்தி,பனங்காடை, மற்றும் ரெட்டைவால் குருவி போன்ற பறவைகள் காணப்படுகின்றன. பக்கத்துலயே எங்கயாச்சும் ரைடு போகணும் அதும் பட்ஜெட்ல போகணும்னு சொல்ற உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ட்ரிப்க்கு கூப்பிடுங்க
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வருகிற மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
▶️வேலூர் மாவட்ட ஆட்சியர்-சுப்புலெட்சுமி (0416-2252345)
▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- மதிவாணன் (0416-2256802)
▶️மாவட்ட வருவாய் அலுவலர்- மாலதி (0416-2253502)
▶️இணை இயக்குனர் /திட்ட அலுவலர், ஊரகவளர்ச்சி முகமை- செந்தில் குமரன் (0416-2253177)
▶️மாநகராட்சி ஆணையர்-.ஜானகி இரவீந்திரன் (0416-2220578)
▶️மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)- முத்தையன் ( 0416-2253034)
ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் உள்ள அலுவலங்களில் கிளீனர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5ஆம் வகுப்பு தேர்ச்சி (ம) தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 01.01.2025 அன்றுள்ளபடி 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட <
காட்பாடி சேனூரைச் சேர்ந்த பிரதீப் (17) 10ம் வகுப்பு மாணவன். இவர் நேற்று தனது நண்பர்களுடன் வீரக்கோயில் மேட்டில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதியில் இறங்கி குளித்த போது திடீரென மூழ்கினார். சக நண்பர்கள் போராடி மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விருதம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.