Vellore

News April 2, 2024

வேலூரில் இன்று 104.2°F வெயில் கொளுத்தியது

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 96 பாரன்ஹீட் பதிவாகி வந்த நிலையில் இன்று (ஏப்ரல் 2)  அதிகபட்ச வெயிலாக இன்று 104.1°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெளியே செல்லும் பொதுமக்கள் தண்ணீர் மற்றும் முன்னெச்சரிக்கையாக செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

News April 2, 2024

துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தேர்வு

image

பாராளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு  வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான துணை மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (ஏப்ரல் 2) நடந்தது. இதில் தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 2, 2024

வேலூர்: அண்ணன் மகனை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

image

வேலூர் மாவட்டம் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 2) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மருத்துவர்களிடம் துரை தயாநிதிக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

News April 2, 2024

முதல்வர் வருகை: வேலூரில் 2500 போலீசார் குவிப்பு

image

மக்களவைத் தேர்தலில் வேலூர், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை (ஏப்ரல் 2) வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

வேலூர் முழுவதும் இன்று ட்ரோன்கள் பறக்க தடை

image

வேலூர் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்று (ஏப்ரல் 2) தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர இருப்பதால் வேலூர் மாநகராட்சி பகுதிகள் முழுவதையும் “ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்” (No Flying Zone) பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

சுட்டெரிக்கும் கோடை வெயில்

image

வேலூரில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 101.66 °F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2024

தேர்தல் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

image

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, பள்ளிகொண்டா அருகில் அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க கட்சி பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் “எடப்பாடி” பழனிசாமி கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர் டாக்டர். பசுபதி அவர்களுக்கு வாக்குகளை சேகரித்தார்.

News April 1, 2024

வேலூர் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

பாராளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலெட்சுமி தலைமையில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று (ஏப்ரல் 1) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!