Vellore

News March 21, 2024

வேலூரில் வேட்பாளர் திடீர் மாற்றம்: புதிய திருப்பம்!

image

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் முருகன் என்பவருக்குப் பதிலாக மகேஷ் ஆனந்த் என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும், தேர்தல் பொறுப்பாளராக இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சல்மானை நியமித்து அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

News March 20, 2024

மின்மாற்றியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராமன்(44), விவசாயி. இவர், இன்று மாலை 5 மணி அளவில் மின்மாற்றியில் ஏறும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திற்கு
சென்ற போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 20, 2024

வேலூர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தல் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் இன்று (மார்ச் 20) வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 20, 2024

வேலூர் அருகே செம்மண் கடத்திய 4 பேர் கைது

image

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைச்சந்து பகுதியில் தனிப்படை போலீசார் இன்று (மார்ச் 20) ரோந்து சென்றனர். அப்போது சட்ட விரோதமாக டிப்பர் லாரி மூலம் செம்மண் கடத்திய வெங்கடேசன், சரத்குமார், ஆனந்த், ரவிச்சந்திரன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

News March 20, 2024

மாற்றுத்திறனாளிக்கு தபால் வாக்கு படிவம் வழங்கிய கலெக்டர்

image

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு செலுத்தும் வகையில் படிவம் 12 D ஐ வேலூர் சலவன்பேட்டை பகுதியில் மாற்றுத்திறனாளி வாக்காளரிடம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி  இன்று (மார்ச் 20) வழங்கினார். இதில் மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்  கவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

News March 20, 2024

வேலூர் மாவட்டம் முழுவதும் 519 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் 732 துப்பாக்கிகள் உரிமம் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இதில் 519 துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 212 துப்பாக்கிகள் வங்கி பயன்பாட்டிற்காக சான்று வழங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு துப்பாக்கி இன்னும் ஒப்படைக்கப்பட வேண்டியுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

News March 20, 2024

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் அறிவிப்பு

image

வேலூர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

News March 20, 2024

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள்: இன்றே கடைசி நாள்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: <>jigyasa.iirs.gov.in/yuvika<<>>

News March 19, 2024

வேலூர்: பிரபல ரவுடி அதிரடி கைது

image

வேலூர் வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (36), கூலித் தொழிலாளி. இவர் நேற்று ரங்காபுரம் வழியாக வேலைக்கு நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த பிரபல ரவுடியான பிரபு சத்யராஜை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றுள்ளார்.  இதுதொடர்பாக சத்யராஜ் சத்துவாச்சாரி போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பிரபுவை இன்று (மார்ச் 19) கைது செய்தனர்.

News March 19, 2024

வேலூர்: மாட்டு வியாபாரியிடம் பணம் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று (மார்ச் 19) அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். மாட்டுச் சந்தையில் மாடுகளை வாங்க வந்த வியாபாரியிடம் உரிய ஆவணம் இல்லாத 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!