India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நாளை (ஏப்ரல் 4) அணைக்கட்டு, கே.வி.குப்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பாமக தலைவர் அன்புமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். இந்த நிகழ்ச்சியில் புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6,272 அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. வேலூரில் டிகேஎம் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 5 இடங்களில் நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (மார்ச் 2) ஆம்பூர் தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரபீக் அகமது, ஆம்பூர் ஜமாத் தலைவர் அஷ்வக்அகமது ஆகியோர் சந்தித்து திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 2) நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இலங்கையை கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சனத்தில் பிரதமர் மோடி கச்சத்தீவை பற்றிப் பேசலாமா? நீங்கள் போடும் நாடகம் எல்லாம் இன்னும் சிறிது நாட்களுக்குத்தான் என்பதை எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன் என்று வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 2) நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 96 பாரன்ஹீட் பதிவாகி வந்த நிலையில் இன்று (ஏப்ரல் 2) அதிகபட்ச வெயிலாக இன்று 104.1°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெளியே செல்லும் பொதுமக்கள் தண்ணீர் மற்றும் முன்னெச்சரிக்கையாக செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (ஏப்ரல் 2) நடந்தது. இதில் தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 2) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மருத்துவர்களிடம் துரை தயாநிதிக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
மக்களவைத் தேர்தலில் வேலூர், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை (ஏப்ரல் 2) வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் வேலூர், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை (ஏப்ரல் 2) வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.