India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (ஏப்ரல் 4) நடத்திய சோதனையில் கள்ளச்சாராயம் 60 லிட்டர், 77 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து 9 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த பாலேங்குப்பம் பஞ்சாயத்து கோடவார்பள்ளி காலனி பகுதியில் 75க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்குள்ள சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி இல்லை எனவே எங்களுக்கு சுடுகாட்டிற்கு தனி பாதை அமைத்து தரக்கோரி இன்று (ஏப்ரல் 4) கருப்பு கொடி ஏந்தி மக்களவை தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் செல்வி (69). இவர் நேற்றிரவு ஓடை பிள்ளையார் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக் செல்வி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். பின்னர் அங்கு இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் இன்று ( ஏப்ரல் 4) ஆந்திரா, தமிழக போலீசார் இணைந்து தேர்தலின் போது எவ்வித அசம்பாவிதமும் நடைப்பெறாமல் இருக்க மாநில எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்துதல், பணம் பரிமாற்றம் மற்றும் பரிசு பொருட்கள், கடத்துவதை தடுப்பது பற்றி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
வேலூர் சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஷல்லிகுமார் (48), தொழிலாளி. இவர் கடந்த 27ஆம் தேதி தனது பைக்கில் சேண்பாக்கம் மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஷல்லிகுமாரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல் 3) இறந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கணியம்பாடியை அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியில், தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று ( ஏப்ரல் 3) நடந்தது. இதில் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டு, ஊர்வலமாக சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருக்கிறார். ஏப்ரல் 9ஆம் தேதி மாலை 4 மணியளவில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் (ரோட் ஷோ) செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டம், பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இன்று ஸ்ரீ விநாயகர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் விநாயகர் சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.