Vellore

News April 7, 2024

வேலூர்:அமமுகவின் தீவிர வாக்கு சேகரிப்பு

image

அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரனின் ஆணைக்கிணங்க மாநில MGR மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் நகர மன்ற உறுப்பினருமான சேவல். நித்யானந்தம் தலைமையில் நேற்று மாலை நெல்லூர் பேட்டையில், வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் ஏசி சண்முகத்தை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கப்பட்டது. அப்போது நகர, மாவட்ட சார்பு அணி, நகர சார்பு அணி மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.

News April 6, 2024

வேலூரில் நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரம்

image

மக்களவை தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பசுபதியை ஆதரித்து வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் அதிமுக  நட்சத்திர பேச்சாளரும், திரைப்பட நடிகையுமான விந்தியா இன்று ஏப்ரல் 6 பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இந்த நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

News April 6, 2024

வேலூரில் நாளை சீமான் தேர்தல் பரப்புரை

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேஷ் ஆனந்த் ஆதரித்து நாளை (ஏப்ரல் 7) வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டி வீதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குகள் சேகரிக்க பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார். என அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

News April 6, 2024

பிரதமர் வருகை – 4500 போலீசார் பாதுகாப்பு

image

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் 10ம் தேதி பிரதமர் மோடி வேலூருக்கு வருகை தரவுள்ளார். இதையொட்டி சிறப்பு பாதுகாப்பு படை ஏடிஜிபி சுரேஷ் தலைமையில் 4500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

News April 6, 2024

வேலூர் நடிகர் மன்சூர் அலிகான் வாக்கு சேகரிப்பு

image

மக்களவை தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் இன்று (ஏப்ரல் 6) வேலூர் நேதாஜி மார்க்கெட், லாங்குபஜார், மண்டி தெரு, கிருபானந்த வாரியார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்று பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

News April 6, 2024

வேலூர்: பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

வேலூர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 246 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், மிகவும் பதற்றமானது இல்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

வேலூர்: தபால் வாக்குகள் பெறும் தேதி அறிவிப்பு

image

மக்களவைத் தேர்தல் முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர் தொகுதியில் மொத்தம் 2785 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களிடம் தபால் வாக்குகளை பெறும் பணி ஏப்ரல் 8ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

வேலூர்: 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்த நபர்

image

அணைக்கட்டு அடுத்த ராஜபுரத்தை சேர்ந்த மணி (26) என்பவர் நேற்று தனது கிராமத்தில் உள்ள சுமார் 100 அடி ஆழம் கொண்ட பொது கிணற்றை சுத்தம் செய்ய இறங்கியபோது கையில் காயம் ஏற்பட்டது. பின்பு அவரால் மேலே வர முடியவில்லை. அவருடைய அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .

News April 5, 2024

வேலூர் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

image

மக்களவைத் தேர்தல் முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த துணை ராணுவ படையினர் இன்று (ஏப்ரல்.5) வேலூர் சைதாப்பேட்டை ஆற்காடு சாலையில் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த அணி வகுப்பு ஊர்வலத்தை டிஎஸ்பி திருநாவுக்கரசு துவக்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் கலந்து கொண்டனர்.

News April 5, 2024

வேலூர் கோட்டை மைதானத்தில் பூமி பூஜை

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 10ஆம்தேதி வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற உள்ள பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதையொட்டி இன்று (ஏப்ரல் 5) கோட்டை மைதானத்தில் பந்தல் அமைக்க பூமி பூஜையை எம்பி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தொடங்கி வைத்தார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!