Vellore

News April 11, 2024

நாளை வாக்குப்பதிவு: வேலூர் கலெக்டர் அறிவிப்பு

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள பிற மக்களவைத் தொகுதிகளைச் சார்ந்த காவல் துறை அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தபால் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க நாளை (ஏப்ரல் 12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் சிறப்பு வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News April 11, 2024

வேலூர்: மணல் கடத்திய 2 பேர் கைது

image

குடியாத்தம் அம்மணாங்குப்பம் ஆற்றில் இருந்து மணல் கடத்துவதாக நேற்று (ஏப்ரல் 10) குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் ஆற்று மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து மணல் கடத்திய வழக்கில் மணிவண்ணன் (51),  பிரபு (32) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

News April 10, 2024

வேலூர்: பாட்டில்களில் பெட்ரோல், டீசல் விற்க தடை

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் தேர்தலை எந்தவித அசம்பாவிதம் இன்றி நடத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட காவல்துறை சார்பில் பெட்ரோல், டீசலை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யக்கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இதுகுறித்து காவல்துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.

News April 10, 2024

மோர்தானா அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தமிழக ஆந்திர எல்லையோரம் உள்ள மோர்தானா அணை வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய அணையாகும். 261 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட இந்த அணையில் இருந்து இன்று முதல் 16 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை அடுத்து இன்று மோர் தானா அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.

News April 10, 2024

வேலூர்: ஏ.சி.சண்முகம் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று (ஏப்.10) பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், ஏ.சி.சண்முகம், மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் கோட்டை மைதானத்தை இஸ்லாமிய பெருமக்கள் நாளை (ஏப்ரல் 11) ரம்ஜான் திருநாளை முன்னிட்டு தொழுகைக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். இது இஸ்லாமிய மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

News April 10, 2024

கடன் தொல்லையால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காளியம்மன் பட்டி அவ்வை நகர் பகுதியில் சென்று கூலி தொழிலாளி சுரேஷ் 33 இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது இதனிடையே இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

News April 10, 2024

வேலூரில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம்

image

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று வேலூர் வருவதையொட்டி, மாநகர் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து காலை 10.30 மணியளவில் வேலூர் கோட்டை மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

News April 9, 2024

தேர்தல் பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு

image

வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவல் அலுவலர்களாக  பணியில் பங்கேற்கும் முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் விருப்ப மனுக்களை வழங்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மணிவண்ணன் இன்று (ஏப்ரல் 9) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 9, 2024

மோடி வருகை: வேலூரில் போக்குவரத்து மாற்றம்

image

வேலூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 10) வருகை தர உள்ளார். அன்றைய தினம் பாதுகாப்பு பணியையொட்டி வாகன நெரிசலைத் தவிர்க்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்பேரில் வேலூர் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளைய தினம் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை அமலில் இருக்கும்.

News April 9, 2024

விவசாய நிலத்திற்குள் நுழைய முயன்ற காட்டு யானைகள்

image

குடியாத்தம் அடுத்த அனுப்பு கிராமத்தில் 5 காட்டு யானைகள் கூட்டமாக விவசாய நிலத்திற்குள் நுழைய முயன்றது. இதையடுத்து அப்பகுதி மக்கள் குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை மீண்டும் காட்டு பகுதிக்கு விரட்டியடித்தனர்.

error: Content is protected !!