India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ சீனிவாசன் பெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு நேற்றிரவு (ஏப்ரல் 19) ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் 1008 பாரம்பரிய நெய் தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ சீனிவாச பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வேலூர், அணைக்கட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையமான வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் ஸ்ட்ராங் ரூமுக்கு தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ்குமார், கலெக்டர் சுப்புலட்சுமி முன்னிலையில் அதிகாரிகள் இன்று (ஏப்.20) பூட்டி சீல் வைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் நாளை (ஏப்ரல் 21) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது அதையும் மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (ஏப்.19) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் பணிகள் தீவிரம் நடந்து வருகிறது. வேலூர் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இன்று இந்த ஆண்டின் அதிகபட்ச வெயிலாக 107.4°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெளியில் செல்லும் போது குடை, தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் ஒரு மணிக்கு பிறகு 3 மணி வரை பொதுமக்கள் ஆர்வமுடன் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு செய்தனர். குறிப்பாக, அதிகமாக அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 53.98% வாக்கு பதிவும், குறைவாக குடியாத்தம் பகுதியில் 49.02 % மூன்று மணி நிலவரம் படி வாக்கு பதிவாகியுள்ளது. மொத்தம் வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19% வாக்குப் பதிவாகியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் காலை 7: 00 மணி முதல் 9 மணி வரை 10.57 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுபலட்சுமி இன்று (ஏப்ரல் 19)தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து வாக்கு பதிவுகள் நடந்து வருவதாகவும் அடுத்த கட்டமாக 11 மணிக்கு இரண்டாம் கட்ட நிலவரத்தை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (ஏப்ரல் 19) வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலூர் தொரப்பாடி எழில் நகரில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமி வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7,40,222 பேர், பெண் வாக்காளர்கள் 7,87,838 மற்றும் மூன்றாம் பாலினம் 213 பேர் என மொத்தமாக 15,28,273 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஒட்டுமொத்தமாக 1568 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு பணியில் சுமார் 2268 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காட்பாடி காந்தி நகர் பகுதியில் டான் பாஸ்கோ பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 154வது வாக்குச்சாவடி மையத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை. வாக்கை செலுத்தவந்த வாக்காளர்கள் வாக்கை செலுத்த முடியாமல் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.