Vellore

News April 30, 2024

வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

News April 30, 2024

வேலூரில் தொடர்ந்து அதிகரித்தது வரும் வெயில்

image

வேலூர் மாவட்டத்தில் தினமும் 100° F வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடைகள் பிடித்தபடியும், முகத்தை துணியால் மறைத்துக் கொண்டும் வெளியில் சென்று வருகின்றனர். மேலும் நீர் சத்து நிறைந்த பழங்கள் மற்றும் ஜூஸ் மற்றும் மோர் வாங்கி பருகி வருகின்றனர்.

News April 30, 2024

மாநகராட்சி முன்னாள் ஆணையருக்கு 3 ஆண்டு சிறை

image

வேலூர் மாநகராட்சியில் 2017ம் ஆண்டு ரூ.20,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமார் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் முன்னாள் வேலூர் மாநகராட்சி ஆணையர் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை, 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நேற்று (ஏப்ரல் 29) உத்தரவிட்டார்.

News April 30, 2024

பொதுமக்களுக்கு சைபர் க்ரைம் விழிப்புணர்வு

image

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவின்பேரில் நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த பொதுமக்களுக்கு சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் புனிதா மற்றும் சைபர் க்ரைம் காவலர்கள் பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பலர் உடன் இருந்தனர்.

News April 30, 2024

வேலூர் மாவட்டத்தின் நேற்றைய வெப்பநிலை

image

வேலூரில் நேற்று (ஏப்.29) 104.9 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் வேலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.

News April 30, 2024

வேலூர்: டாஸ்மாக் பாருக்கு தீ வைத்த 15 பேர் கைது

image

வேலூர் அடுத்த பெருமுகை டாஸ்மாக் மதுக்கடை பார் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி போதை ஆசாமிகளால் சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அலமேலு மங்காபுரத்தை 15 பேரை கைது செய்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 30, 2024

மாவட்டம் முழுவதும் 267 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 29)  காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 267 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இன்று ஒரே நாளில் 15 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ‌இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

வேலூர்: டாஸ்மாக் பாருக்கு தீ வைத்த 15 பேர் கைது

image

வேலூர் அடுத்த பெருமுகை டாஸ்மாக் மதுக்கடை பார் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி போதை ஆசாமிகளால் சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அலமேலு மங்காபுரத்தை 15 பேரை கைது செய்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 30, 2024

வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் விடுமுறை

image

வேலூர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் நாளை (மே 1) தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (ஏப்ரல் 29) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

பட்டப்படிப்பு: பதவி உயர்வு வழங்க கோரிக்கை

image

வேலூர் மாநகராட்சியில் பணிபுரியும் பட்டப்படிப்பு முடித்த அலுவலக உதவியாளர்கள் மற்றும் வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் சிட்டிபாபு தலைமையில் ஊழியர்கள் நேற்று (ஏப்ரல் 29) மாநகராட்சி கமிஷனர் ஜானகி ரவீந்திரனை சந்தித்து பட்டம் படித்த அலுவலக உதவியாளர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு பரிந்துரை செய்துள்ளவாறு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

error: Content is protected !!