Vellore

News November 17, 2024

வேலூர் கூட்டுறவு துறை அதிகாரிகள் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டுள்ளன. இதன் நேர்முகத் தேர்வு வருகிற 28-ம் தேதி முதல் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட் www.drbvellore.net என்ற இணையதளத்தில் நாளை (நவம்பர் 18) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 17, 2024

வேலூர் மாவட்டத்தில் 4,331 விண்ணப்பங்கள் பெறப்பட்டன

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள 669 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நேற்று( நவ 16) நடந்தது. இதில் பெயர் சேர்க்க 2,967 விண்ணப்பங்களும், நீக்கம் செய்ய 122 விண்ணப்பங்களும், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக 1,242 விண்ணப்பங்களும் என மாவட்டம் முழுவதும் 4,331 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 16, 2024

வேலூர் எஸ்பி எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (நவம்பர் 16) நடத்திய சோதனையில் 66 மது பாட்டில்கள், 200 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.

News November 16, 2024

வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. இப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News November 16, 2024

வேலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

தமிழகத்தில் இன்று 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News November 16, 2024

வேலூர் மாவட்டத்தில் மூன்று தாசில்தார்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் மாவட்டத்தில் 3 தாசில்தார்களை டிரான்ஸ்பர் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று மாலை உத்தரவிட்டார். அதன்படி பேரணாம்பட்டு தாலுகா தாசில்தார் வடிவேலு அணைக்கட்டு தாலுகா தாசில்தாராகவும், அணைக்கட்டு தாலுகா தாசில்தார் வேண்டா வேலூர் கலெக்டர் அலுவலக நிலப்பிரிவு தனி தாசில்தாராகவும், சென்னை சேப்பாக்கம் ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் சிவசங்கர் பேரணாம்பட்டு தாலுகா தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்.

News November 16, 2024

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் – எம்எல்ஏ நந்தகுமார் வேண்டுகோள்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் இன்று (நவம்பர் 16) நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் இறுதி பட்டியலில் இடம்பெற செய்ய திமுகவினர் தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி. நந்தகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 16, 2024

வேலூர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு வழங்கும் டாக்டர். அம்பேத்கர் விருது பெற தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி நேற்று (நவம்பர் 15) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். விருதுக்கான விண்ணப்பத்தை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்களை வரும் 20-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

News November 15, 2024

வேலூர் மாவட்டத்தில் 89 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (நவம்பர் 15) நடத்திய சோதனையில் 89 மது பாட்டில்கள், 200 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

News November 15, 2024

 பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு 79 மையங்கள் அமைப்பு

image

தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வானது 2025 மார்ச் மாதம் 3ஆம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே மாணவர் விவரங்கள் பிளஸ் 1 பொதுத் தேர்வு அடிப்படையில் தயார் செய்யப்பட்டன. இதில், மாற்றுச் சான்றிதழ் பெற்றவர்கள், இறந்து போனவர்கள் விவரங்களை நீக்கும் பணிகள் முடிந்து மாணவர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொது தேர்வுக்கு 79 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளன.