India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப்-II & IIA-க்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பில்
கலந்துகொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஜூன் 29) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 19 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி இன்று (ஜூன் 28) உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சனி, அணைக்கட்டு உள்வட்ட வருவாய் ஆய்வாளராகவும், அங்கிருந்த ஜெயந்தி கலெக்டர் அலுவலக நிலப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட 19 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு இன்று (ஜூன் 28) நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். மேலும் துறைசார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று (ஜூன் 28) நடந்தது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஜூன் 27) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 740 லிட்டர் கள்ளச்சாராயம், 50 பாக்கெட் சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக நேற்று ஒரே நாளில் 10 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (27.06.2024) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சாலைகளில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு மாவட்ட அளவில் குழு அமைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட அளவிலான குழுவினை அணுகி இழப்பீடு தொகையை பெற்று பயனடையுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஜூன் 27) தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 18ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (ஜூன் 27) நடந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, துணைவேந்தர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நல சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வருகிற ஜூன் 28ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல சங்க பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு கருத்துகளை தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று மாலை (ஜூன் 25) ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கந்தன், மாவட்ட இணை செயலாளர் பழனி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.