India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடும் நேரம் நாளை (ஆகஸ்ட் 12) முதல் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். தேசிய விடுமுறை நாட்கள், இரண்டாம் சனிக்கிழமை, பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை நாட்கள் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு இன்று (ஆகஸ்ட் 11) மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடந்த வாரத்தை விட மீன்களின் விலையும் சற்று குறைந்தது. பெரிய வஞ்சரம் மீன் ரூ. 1200, சிறிய வஞ்சரம் மீன் ரூ.800, இறால் ரூ. 450 முதல் 550, கட்லா ரூ. 160, நண்டு ரூ. 450 முதல் 500, மத்தி ரூ. 200 முதல் 300 வரை என மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.
வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரன் கோயிலில் இன்று (ஆகஸ்ட் 11) சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் முனீஸ்வரரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஆராதனை காட்டப்பட்டது. மேலும், மதியம் 12 மணியளவில் உச்சி கால பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேற்று மின்னஞ்சல் மூலம் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் மருத்துவமனைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமாகின. மேலும், ஒடுகத்தூர் அருகே உள்ள உத்திரகாவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாகவும் ,மழையின் அளவு அதிகரித்ததன் காரணமாகவும் அப்பகுதியில் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கிச்சளி சம்பார். ஐ.ஆர்59 போன்ற நெல் ரகங்கள் நீரில் மூழ்கியது.
வேலூர் மாவட்டம் வனச்சரகத்தில் பணியாற்றி வரும் வனச்சரகர் குமார் பணியில் மெத்தனம் காட்டியதாக கூறி வேலூர் மாவட்ட வன அலுவலர் குருசாமி தபலா விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை மண்டல வனப்பாதுகாவலர் ராகுலிடம் வழங்கினார். அந்த அறிக்கையின் அடிப்படையில் வேலூர் வனச்சரக அலுவலர் குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மண்டல வனப்பாதுகாவலர் ராகுல் நேற்று (ஆகஸ்ட் 10) உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் இன்று (ஆகஸ்ட்.10) தேதி நடந்தது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், புதிய குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல் என மொத்தம் ஒரே நாளில் 179 மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பாலாற்றில் தன் அக்காவுடன் குளிக்க சென்ற 8 வயது சிறுமி திவ்யா நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். இது குறித்த தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றுள்ளனர். நாளை பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான நேர்காணல் இன்று ( ஆகஸ்ட் 10 ) நடந்தது. இதில் 3 மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தாராபடவேடு பகுதியை சேர்ந்தவர் துணைவியாபாரம் செய்து வரும் மகாலட்சுமி. இவரிடம் தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலு மற்றும் உமா என்கிற தம்பதியினர் இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி ரூ.55 லட்சம் வாங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் வாங்கிய பணத்தை திருப்பி தராததால் ஏமாற்றம் அடைந்த மகாலட்சுமி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.