India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் (அக்.25) இன்று வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,அக்டோபர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கள பிரச்னைகளை கூட்டத்தில் பங்கேற்று மனுக்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம்.
வேலுார் மாவட்டத்தில் பணியாற்றி வந்த 12 சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டுள்ளார். வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பணியாற்றும் சீதா, கே.வி.குப்பம் காவல் நிலையத்துக்கும், வேப்பங்குப்பம் எஸ்ஐ குமார், சத்துவாச்சாரிக்கும், பாகாயம் எஸ்ஐ தென்னரசி, வேலூர் வடக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும் என மொத்தம் 12 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (அக்டோபர் 24) நடத்திய சோதனையில் 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக நேற்று ஒரே நாளில் 5 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மறைந்த ரத்தன் டாடாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி நாளை (அக்டோபர் 25) கோயில் வளாகத்தில் உள்ள நடராஜர் சன்னதி அருகே மோட்சதீபம் ஏற்றப்பட உள்ளது என ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வேலூர் அன்பு நெஞ்சங்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (அக்டோபர் 24) காட்பாடியில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னைக்கு புறப்படும் நேரத்தில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேலூரில் உள்ள நறுவீ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சை முடிந்து இன்னும் சற்று நேரத்தில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ அல்லது நுண்ணீர்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு (MIMIS) என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பித்து, பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
வேலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை, தங்களின் குறைகளை 90927 00100 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பதிவிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரிவிக்கப்படும் தகவல்கள் அனைத்தும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
காட்பாடி காங்கேயநல்லூரில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 31 ஆம் ஆண்டு குருபூஜை நாளை(அக்.25) நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாட்டில் முருகர் பாடல்களை பாடி அசத்திய குட்டி முருகன் என்று அழைக்கப்படும் தியாவின் இசை சொற்பொழிவு நாளை காலை 9 மணிக்கு காங்கேயநல்லூர் வாரியார் ஞானத்திரு வளாகத்தில் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.
வேலூர் மாவட்டத்தில் 2வது முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் அமைப்பதற்கான சங்க உறுப்பினர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடைய நபர்களின் பெயர், முகவரி, கல்வித்தகுதி மற்றும் ஏற்கனவே மேற்கொண்ட சமூக தொண்டுகள் ஆகிய விவரங்களுடன் நவம்பர் 7-ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் 14 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். அதன்படி மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தாராக இருந்த குமார் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்துக்கும், ஆட்சியர் அலுவலகம் தலைமை உதவியாளர் நதியா மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளராகவும் இவர்கள் உள்பட மொத்தம் 14 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.