Vellore

News August 9, 2025

வேலூரில் மாரத்தான் போட்டி

image

காட்பாடி அருகே உள்ள சித்தூரில் இன்று (ஆகஸ்ட் 9) மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த மரத்தான் போட்டியில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் போட்டியாளராக பங்கேற்று ஓடினார். சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேலூர் நேதாஜி மைதானம் வரை போட்டி நடைபெற்றது. சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

News August 9, 2025

வேலூர் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…

image

வேலூர் மாவட்டத்தில், ரேஷன் கார்டு திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெறுகிறது. வேலூரில் மேல்வல்லம், காட்பாடியில் உள்ளி புதூர், அணைக்கட்டில் கீலாச்சூர் மற்றும் வெப்பந்தல், குடியாத்தத்தில் ராமாலை மற்றும் காந்தி கணவாய், கே.வி.குப்பத்தில் காளம்பட்டு, பேரணம்பட்டில் பரவக்கல் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும். ஷேர் பண்ணுங்க <<17348849>>தொடர்ச்சி<<>>

News August 9, 2025

வேலூர் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…

image

ரேஷன் கார்டு திருத்த முகாமில், ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்க்கை / நீக்கம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க போன்ற பல்வேறு சேவைகளை செய்யலாம். முகாம்கள் அந்தந்த வட்டங்களில் எங்கு நடைபெறுகிறது என்பதை அதிகாரிகளை (வேலூர் – 0416-2252586, 0416-2220519, குடியாத்தம் – 04171-221177, காட்பாடி – 0416-2244647) தொடர்பு கொண்டு கேளுங்கள். ஷேர் பண்ணுங்க

News August 9, 2025

வேலூரை வெளுத்து வாங்கும் கனமழை

image

வேலூரில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக அம்முண்டியில் 80.20 மி.மீ மழை பதிவாகி உள்ளது. ஒடுகத்தூர் 11, குடியாத்தம் 38, மேல்ஆலத்தூர் 27.40, மோர்தானா அணை 25, ராஜாதோப்பு அணை 25, வட விரிஞ்சிபுரம் 47, காட்பாடி 61, பொன்னை 122, பேரணாம்பட்டு 4.40, கலெக்டர் அலுவலகம் 41.70, வேலூர் தாலுகா 36.30 பதிவாகியுள்ளது.

News August 9, 2025

வேலூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.09) குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட நடு பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி ஊராட்சி ஒன்றியம் டி.கே புரம் டான் பாஸ்கோ பள்ளி, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் சேர்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. தேவை உள்ளவர்கள் நேரில் சென்று மனுக்களை அளிக்கலாம்.

News August 9, 2025

வேலூர் ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம் நாளை ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெற உள்ளது. அதன் விவரம் . 
1.வேலூர்- மேல் வல்லம் கிராமம் 
2.அணைக்கட்டு- கீழாச்சூர், வெப்பந்தல்
3.காட்பாடி- உள்ளி புத்தூர் 
4.குடியாத்தம்- ராமாலை, காந்தி கணவாய் 
5.கே.வி.குப்பம்-காலாம்பட்டு 
6.பேரணாம்பட்டு- பரவக்கல் 
எனவே பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஆகஸ்ட்-8) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 45 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.

News August 9, 2025

பள்ளி மாணவிக்கு 10 ஆயிரம் நிதி வழங்கிய கலெக்டர்

image

தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச இளைஞர் மன்றம் 5.0 நிகழ்வில் தமிழ்நாட்டு மாணவர்களின் சார்பில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லத்தேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி நிஷாந்தினிக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.10,000/-க்கான காசோலையை இன்று வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி வழங்கினார்.

News August 8, 2025

ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் வழங்கிய ஆசிரியர்களை
மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் புத்தகம் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் (பொ), மாவட்ட கல்வி அலுவலர்கள் செந்தில்குமார் (இடைநிலை), ரமேஷ் (தனியார் பள்ளிகள்) ஆகியோர் உடனிருந்தனர்.

News August 8, 2025

வேலூர்-பெங்களூரு நெடுஞ்சாலை கொணவட்டம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

image

வேலூர்–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் கொணவட்டம் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பு கருதி இன்று அகற்றப்பட்டன. வேலூர் டவுன் போலீஸ், தேசிய நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய இந்த நடவடிக்கையில், பல தற்காலிக கட்டிடங்கள் மற்றும் வணிகக் கூடங்கள் இடிக்கப்பட்டன. பொதுமக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

error: Content is protected !!