India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், காலையிலே எண்ணேய் தேய்த்து குளித்தும், பலகாரங்கள் செய்து அதை உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும், அறுசுவை உணவு சாப்பிட்டும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும், திரையரங்குகளில் பலர் புதுப்படங்களை கண்டு ரசித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். இதில், உங்களை மகிழ்வித்தது எது? COMMENT பண்ணுங்க.
மத்திய மாநில அரசுகளின் ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம். டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரியில் கோரிக்கையை பதிவு செய்யலாம். இதற்காக அனைத்து அஞ்சலகங்களிலும் இன்று (நவ-1) முதல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி நவ-12 ஆம் தேதி காட்பாடி அரசு கல்வியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் இதற்கான படிவத்தை பூர்த்தி செய்து பள்ளித் தலைமையாசிரியர் பரிந்துரையுடன் தமிழ் வளர்ச்சி துணை இயக்குனரிடம் வழங்கி பங்கேற்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 31) அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 28 மாவட்டங்களுக்கும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் மழை வருமா?.
வேலூர் அதிமுக மாவட்ட கழக செயலாளர் வேலழகன் தனது சமூக வலைத்தளத்தில் இன்று (அக்.31) தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், அனைவரது வாழ்விலும் இருள்நீக்கி ஒளி பிறக்கவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் என தனது தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.
தீபாவளியையொட்டி வேலூர் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பழைய, புதிய பஸ் நிலையம், காட்பாடி ரயில் நிலையம், வழிபாட்டு தலங்கள், மாநில எல்லை சோதனை சாவடிகள், மாவட்ட எல்லைகளில் சீருடையிலும், சாதாரண உடையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேலூர் மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (அக்டோபர் 30) நடத்திய சோதனையில் 55 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
உலக நன்மைக்காகவும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும் வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில் நாளை அக்டோபர் 31-ம் தேதி கோயில் வளாகத்தில் 10,008 அகல் விளக்கில் ஸ்ரீ சக்கர வடிவில் நெய் தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ சக்தி அம்மா அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.