Vellore

News August 12, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஆக.12) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News August 12, 2025

குடியாத்தத்தில் மீண்டும் சாராயம்!

image

குடியாத்தம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் ஆய்வு செய்த போது, ஒரு வீட்டில் சரோஜா, பிரபாவதி என்பவர்கள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. பின் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சாராயம் காய்ச்சுவதை தடுக்க TN அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், சில பகுதியில் நடக்கும் இதுபோன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

News August 12, 2025

குடியாத்தத்தில் மீண்டும் சாராயம்!

image

குடியாத்தம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் ஆய்வு செய்த போது, ஒரு வீட்டில் சரோஜா, பிரபாவதி என்பவர்கள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. பின் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சாராயம் காய்ச்சுவதை தடுக்க TN அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், சில பகுதியில் நடக்கும் இதுபோன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

News August 12, 2025

குடியாத்தம்: தாயுமானவர் திட்டத்தை துவக்கி வைத்த எம்எல்ஏ

image

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருள்கள் வழங்கும் திட்டம் ஆகும். இத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி குடியாத்தம் சட்டமன்ற தொகுதி சீவூர் ஊராட்சியில் கள்ளூர் கிராமத்தில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

News August 12, 2025

வேலூரில் ஆசிரியர் வேலை… கடைசி வாய்ப்பு

image

தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, இயற்பியல் உள்ளிட்ட 12 பாடப் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. PG டிகிரி + B.Ed முடித்தவர்கள் இதற்கு இன்றைக்குள் (ஆகஸ்ட் 12) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 1800 425 6753 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். இந்த <>லிங்கில் <<>>அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கும் இணையதளம் இருக்கு. ஷேர் பண்ணுங்க

News August 12, 2025

வேலூரில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

வேலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News August 12, 2025

வேலூரில் கிராம உதவியாளர் வேலை… கடைசி வாய்ப்பு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வேலூரில் 4, காட்பாடியில் 9, குடியத்தில் 8, அணைக்கட்டில் 8, கே.வி.குப்பத்தில் 1 என மொத்தம் 30 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு படித்த, தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட் 12) தான் கடைசி நாள். இந்த <>இணையத்தளத்தில் <<>>உடனே விண்ணப்பியுங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News August 12, 2025

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க இங்கு போங்க

image

காஞ்சிபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 12) குடித்தாம், வேலூர், கணியம்பாடி, பேரணாம்பட்டு, கே.வி. குப்பம் ஆகிய பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் அதனை மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 11, 2025

வேலூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

வேலூர் மாவட்ட காவல்துறையால் இன்று (ஆக.11) இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

News August 11, 2025

வேலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை

image

வேலூர் மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக உருவாக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில், இன்று (ஆக.11) மாவட்டம் முழுவதும் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் நடத்திய சோதனையில் 265 மது பாட்டில்கள், 18 பீர் பாட்டில், கர்நாடக மாநில 50 மது பாக்கெட்டுகள், 50 லிட்டர் கள்ளச்சாராய ஊரல், 3 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!