India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காட்பாடி ரயில்வே போலீசார் நேற்று பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தனர். அப்போது முன்பதிவில்லா பெட்டியில் சந்தேகத்துடன் அமர்ந்திருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பாணாவரத்தை சேர்ந்த ராஜேஷ்(23) என்பதும் அரக்கோணத்தில் இருந்து பெங்களூருக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 1500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று பொதுவிநியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாமில் மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் நடந்தது. முகாமில் மொத்தம் 207 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 197 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. 10 மனுக்கள் மட்டும் பரிசீலனையில் உள்ளன. முகாமில் அதிகபட்சமாக 77 பேர் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கவும், 66 பேர் தங்களின் செல்போன் எண்ணை மாற்றவும் மனு அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற பயிலும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய http://scholarships.gov.in மற்றும் http://socialjustice.gov.in ஆகிய மத்திய அரசின் இணையதளங்களை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (அக்டோபர் 19) நடத்திய சோதனையில் 81 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 2023-2024-ம் கல்வி ஆண்டில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, முதல் 10 இடங்களை பிடித்த காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 20 மாணவ/மாணவியர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், காவலர் சேமநல நிதியிலிருந்து ரூபாய்.1,23,000/- பணத்தை ஊக்கத்தொகையாக நேற்று அக்டோபர் 18 வழங்கினார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (அக்டோபர் 18) நடத்திய சோதனையில் 73 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 18) அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் குறித்து சிறப்பு குறைதீர்வு முகாம் வேலூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக குறிப்பிட்ட கிராமங்களில் நாளை நடக்கிறது. வேலூர் தாலூகா- கீழ்மொணவூர், அணைக்கட்டு-கரடிகுடி, குடியாத்தம் -ராஜா கோவில், கேவிகுப்பம்-மேல்காவனூர், ஆகிய இடங்களில் நடக்கிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம் போன்றவற்றை செய்துகொள்ளலாம்.
பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை வழங்கும் வகையில் வேலூர் வட்டம்-கீழ்மொணவூர், குகையநல்லூர், குடியாத்தம் வட்டம் ராஜாகோயில், கே.வி.குப்பம் வட்டம் மேல்காவனூர், பேரணாம்பட்டு வட்டம் சொக்கரிஷிகுப்பம் ஆகிய இடங்களில் நாளை (அக்.19) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பல்வேறு இடங்களில் மதுபாட்டில் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்கும் விதமாக இன்று (அக்டோபர் 17) மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 88 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 6 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.