India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்ட காவல்துறையால் , (செப் 16) அன்று இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
வேலூர் மக்களே! மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200 மற்றும் TOLL FREE NO-1930 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்!
வேலூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை.
✅ குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS & FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.
✅ ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
✅ கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.
வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று (செப்.,16) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், வருவாய் கோட்டாட்சியர்கள், தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <
தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆட்டோக்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைத்ததாக 8 ஆட்டோக்களுக்கு ரூ.500 முதல் 1000 வரை என மொத்தம் 8000 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் போலி பதிவெண் கொண்டு ஓட்டிய ஆட்டோவை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளருக்கு ரூ,10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செப்.,16) மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், சைதாப்பேட்டை, கணியம்பாடி, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி மற்றும் அதனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (செப்ட. 16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.
Sorry, no posts matched your criteria.