Tuticorin

News March 26, 2025

ஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில் இன்று முக்கிய விசாரணை!

image

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் முதல் குற்றவாளியாக கருதப்படும் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் கோரி வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு இன்று(மார்ச் 26) விசாரணைக்கு வருகிறது. 2020 ஜூன் 20 அன்று விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் – பென்னிக்ஸ் போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

News March 26, 2025

சுற்றுலாப் பயணிகள் பாரதியார் இல்லம் வர வேண்டாம்: கலெக்டர்

image

எட்டையாபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் இல்லத்தின் மேற்கூரை நேற்று(மார்ச் 25) திடீரென இடிந்து விழுந்தது. இது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழையினால் வீடு இடிந்துள்ளதாகவும் இது சம்பந்தமாக பொறியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தவர், பாரதியார் இல்லம் சீரமைக்கப்படும் வரை சுற்றுலாப் பயணிகள் இங்கு வரவேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். SHARE IT.

News March 26, 2025

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு-நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.

News March 25, 2025

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சார்பில் ஏலம் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு காவல்துறையால் மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்ட 19 இருசக்கர வாகனங்கள், 1 நான்கு சக்கர வாகனம் ஆகியவை வரும் 29ஆம் தேதி கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்.பி ஆபிஸில் வைத்து ஏலம் விடப்பட உள்ளது. இந்த வாகனங்களை வரும் 27, 28 தேதிகளில் நேரில் பார்வையிட்டு கொள்ளலாம் என எஸ்.பி அலுவலகம் தெரிவித்துள்ளது. கம்மி விலையில் வாகனம் வாங்க கண்டிப்பா இங்க போங்க. *நண்பர்களுக்கும் பகிரவும்*

News March 25, 2025

தூத்துக்குடி போலீசார் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (மார்ச் 24) சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. “உங்கள் செல்போனிற்கு வரும் OTP-யை யாரிடமும் பகிர வேண்டாம்” எனவும், சைபர் குற்றப் புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் தொலைபேசி வாயிலாகவும் அல்லது cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்கலாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிர்ந்து உஷார் படுத்தவும்*

News March 25, 2025

தூத்துக்குடியில் விரால் மீன் வளர்ப்பு பயிற்சி

image

தூத்துக்குடியில் உள்ள அரசு மீன்வளக் கல்லூரியில் வரும் மூன்றாம் தேதி மீன்வளக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து விரால் மீன்கள் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ரூபாய் 300 கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என  மீன்வளக்கல்லூரி முதல்வர் நேற்று தெரிவித்துள்ளார்.ஷேர் பண்ணுங்க

News March 25, 2025

கோவில்பட்டியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

image

கோவில்பட்டி நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணங்களை மார்ச்.31 க்குள் செலுத்த வேண்டும். அதேபோல் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடை நடத்துபவர்கள் மார்ச்.27 க்குள் வாடகை செலுத்த வேண்டும். வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில்பட்டி நகராட்சி ஆணையர் கமலா தெரிவித்துள்ளார்.

News March 25, 2025

திருச்செந்தூர் ஆர்டிஓ நேர்முக உதவியாளரின் நற்செயல்

image

சாத்தான்குளம், அரசூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் இருதய ஆபரேஷனுக்கு பணம் தேவைப்பட்டதால் அவரது நிலத்தை விற்க முயன்றுள்ளார். அப்போது வரைமுறை பட்டாவாக மாற்ற வேண்டி இருந்ததால் காலதாமதமானது. இதனால் திருச்செந்தூர் ஆர்டிஓ-வின் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன் ஆபரேஷன் செலவுக்கு தனது 10 பவுன் நகையை தருவதாக தெரிவித்துள்ளார். இதை, பாராட்டி சாத்தை விவசாய சங்க தலைவர் லூர்து மணி புத்தகம் வழங்கி கௌரவித்தார்

News March 25, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை எஸ்.பி அலுவலகம் வெளியிட்டுள்ளது. *இரவில் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பகிரவும்*

News March 24, 2025

மும்மொழியை ஏன் எதிர்க்கிறோம்-தூத்துக்குடி எம்பி விளக்கம்

image

தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், “தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயாக்களில் தமிழ் கற்றுக் கொடுக்க நிரந்தர ஆசிரியர்கள் 0, ஹிந்திக்கு 86, சமஸ்கிருதத்துக்கு 65 பேர் உள்ளனர் என மத்திய அரசு கூறுகிறது. இப்படி இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பதை தான் காலம் காலமாக திமுக எதிர்க்கிறது” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!