Tuticorin

News November 9, 2024

கோவில்பட்டியில் இன்று முன்னோடி மனுநீதி நாள்

image

கோவில்பட்டியில் அரசுத் துறையினர் மக்கள் இருக்கும் இடங்களுக்கு நேரடியாக மனுக்களை பெறும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற நிகழ்ச்சி வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது, இதற்கான முன்னோடி மனுநீதி நாள் கோவில்பட்டி வட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் அலுவலர் அலுவலகங்களில் இன்று(நவ.09) காலை 10 மணிக்கு மேல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 9, 2024

வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தற்போது மழைக்காலம் துவங்கி விட்டதால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை சாலைகளில் கவனமாகவும் அதிக வேகம் இல்லாமல் ஓட்ட வேண்டும்; மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, ஒருவரை ஒருவர் முந்தி செல்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்” என எச்சரித்துள்ளது.

News November 8, 2024

தூத்துக்குடி இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (நவ08) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 8, 2024

தூத்துக்குடியில் பொது விநியோகத் திட்ட முகாம் அறிவிப்பு

image

மாதந்தோறும் பொது விநியோகத் திட்ட குறைகளை களைய சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (9.11.2024) காலை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மேலும் புதிய குடும்ப அட்டைக்கு பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

தூத்துக்குடி தள்ளுவண்டி வியாபாரிகள் கவனத்திற்கு

image

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி மாரியப்பன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இனி தெருவில் நடந்து சென்றோ தள்ளுவண்டியில் சென்றோ விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு பதிவு கட்டணம் ரூ.100 ரத்து செய்யப்படுகிறது. ஆனால் அவர்கள் கட்டணம் ஏதும் செலுத்தாமல் பதிவு சான்றிதழ் பெற்று நகல் வைத்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

தூத்துக்குடி மவாட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிப்பு

image

தமிழகத்தில் தென்கிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகின்றது. அதன்படி, குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை(9.11.2024) காலை 8.30 கனமழை முதல் மிககனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 8, 2024

முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க டி ஃபார்ம் பி ஃபார்ம் மற்றும் அவர்கள் அனுமதி பெற்ற நபர்கள் தகுதி சான்றிதழ் உடன் வரும் 20ம் தேதிக்குள் www.mudhalvarmarundhagam என்ற இணையதள முகவரிக்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 8, 2024

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் கழுகு பார்வை புகைப்படம்

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் துவங்கி நடைபெற்று வந்தது. இதன் சிகர நிகழ்ச்சி ஆன சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாட்டவர் என பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியின் கழுகு பார்வை புகைப்படம் வெளியாகி உள்ளது.

News November 7, 2024

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் நியமனம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (நவ07) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 7, 2024

தூத்துக்குடி: கப்பல் படையில் சேர இலவச பயிற்சி

image

“கப்பல் படை, கடலோர பாதுகாப்பு படையில் சேர்வதற்கு இலவச வழிகாட்டுதல் பயிற்சி கடலோர பாதுகாப்பு குழுமத்தால் நடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவ கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும், இதற்கான விண்ணப்ப படிவங்கள் கடலோர காவல் நிலையங்கள் மற்றும் மீனவர் சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்” என கடலோர பாதுகாப்பு குழும செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.