India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி 6வது புத்தகத் திருவிழா ஆக.22 முதல் 31 வரை நடைபெறுகிறது. இதையொட்டி, புகைப்படப் போட்டி ஆக. 14 – 21 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட கலாச்சாரம், பாரம்பரியம், இயற்கை, தொழிலாளர் வாழ்க்கை போன்ற தலைப்புகளில் அதிகபட்சம் 5 சொந்தப் படங்களை, AI/கிராபிக்ஸ் இல்லாமல், 5 MBக்கு குறைவாக, thoothukudi.nic.in மூலம் பதிவேற்றலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
நாட்டின் 79வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் (ஆக. 15) கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி தேசமே விழாக்கோலம் பூண்டு வருகிறது. அந்த வகையில் கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் சிகப்பு வெள்ளை பச்சை நிறத்தில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மக்களே தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக தற்காலிக பணியாளர்களுக்கு பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தோடு புதிதாக இ.ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்குகிறது. <
கோவில்பட்டி அருகே ஈராச்சி VAO அலுவலகத்தில் மாரீஸ்வரி என்பவர் தனது தாத்தா, பாட்டி இறப்பினை பதிவு செய்து சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். VAO செந்தில்குமார் ரூ.3,500 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில்குமார் 2012ம் ஆண்டில் கோவில்பட்டி, கிராம நிர்வாக அலுவலராக இருந்த போது பட்டா மாற்றம் தொடர்பாக ரூ.3,000 லஞ்சம் வாங்கியதாக தகவல்.
சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. தூத்துக்குடி மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய <
தூத்துக்குடி ஆர்டிஓ பிரபு அறிக்கையில், ஆகஸ்ட் மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (14) காலை 11 மணிக்கு தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் தாலுகா விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி பீச் ரோடு துணைமின் நிலையத்தில் நாளை (13.08.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இனிகோ நகர், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு, உப்பள பகுதிகள், லயன்ஸ் டவுன், சுனோஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மக்களே, உங்கள் ஏரியாவில் உள்ள குறைகளை தெரிவிக்க உங்கள் பகுதி தாசில்தார் செல்போன் நம்பரை அவசியம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
▶️தூத்துக்குடி- 94450 00680
▶️திருவைகுண்டம்- 94450 00681
▶️திருச்செந்தூர்- 94450 00682
▶️சாத்தான்குளம் – 94450 00683
▶️கோவில்பட்டி – 94450 00684
▶️ஓட்டப்பிடாரம் – 94450 00685
▶️விளாத்திகுளம் – 94450 00686
▶️எட்டையபுரம் – 94450 00687
*ஷேர் பண்ணுங்க*
தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் சாலையில் உள்ள ஸ்ரீ முருகன் பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று இரவு நேரத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். ரூ.7 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.