India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டமும் ஆண் குழந்தைகளுக்கு செல்வமகன் சேமிப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதற்கான சிறப்பு முகாம் இம்மாதம் 30ஆம் தேதி வரை தூத்துக்குடி தபால் நிலையங்களில் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று பொது மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,“இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்; இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்; மேலும் வாகனத்தில் பயணம் செய்ய இருவரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை முகாம் நவ.,16 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த முகாம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இளம் வாக்காளர்கள் முகாமிற்கு செல்லும்போது, வாக்குச் சாவடி நிலை அலுவலருடன் தனித்துவமான செல்பி எடுத்து அதனை மாவட்ட தேர்தல் அலுவலரின் இணையதளத்தில் பதிவிட்டால் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நேற்று(நவ.,13) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், தூத்துக்குடியில் 40 இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவைகளை மீட்டு அந்த இடங்களில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கபடி, கிரிக்கெட், கைப்பந்து போன்ற விளையாட்டு திடல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (நவ.13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் நாளையும் சுற்றுப்பயணம் செய்ய துணை முதல்வர் உதயநிதி இன்று மாலை 6 மணிக்கு மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் வருகிறார். அங்கு நான்கு வழிச்சாலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,“சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் இணையதளம் மோசடிகளை தவிர்க்கும் வகையில் எப்போதும் தங்கள் இணைய வழி தொடர்பில் வலுவான கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டும். மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை கடவுச்சொல்லை மாற்றியமைக்க வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்த பணியானது கடந்த மாதம் 29ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், ஆதார் இணைத்தல் ஆகியவைகளுக்கான சிறப்பு முகாம் இம்மாதம் 16 மற்றும் 17 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வைத்து நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வராக பொறுப்பேற்ற பின், முதன்முதலாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக உதயநிதி ஸ்டாலின் நாளை(நவ.,13) தூத்துக்குடி வருகை தரவுள்ளார். இதை தொடர்ந்து மாலை 6 மணியளவில் புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே அவருக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர்கள் திரளாக கலந்துகொள்ள அமைச்சர் அனிதாராதா கிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.