Tuticorin

News September 27, 2024

4,436 மாற்றுத்திறனாளிகளுக்கு நல திட்டங்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்கள், செயற்கை கால்கள், உதவித்தொகை, காது கேட்கும் கருவி போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 4,436 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News September 27, 2024

டெல்லியில் தமிழக முதல்வருக்கு தூத்துக்குடி எம்பி வரவேற்பு

image

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைநகர் டெல்லிக்கு நேற்று(செப்.26) வருகை தந்துள்ளார். முதல்வர் அவர்களை தூத்துக்குடி எம்பி கனிமொழி சிறப்பான வரவேற்பு அளித்து வரவேற்றார். அவருடன் தமிழக எம்பிக்கள் தயாநிதி மாறன், திருச்சி சிவா மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

News September 27, 2024

இரவு ரோந்து காவல் துறையினர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் விவரம் வெளியிட்டுள்ளது.

News September 26, 2024

காப்பீட்டு திட்டத்தில் பயனடைய ஆட்சியர் அழைப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதல்வர் கலைஞரின் காப்பீட்டு திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, வட்டாட்சியர் அலுவலகத்தில் காப்பீட்டு திட்டப்பதிவு முகாம் இம்மாதம் இறுதியில் இருந்து நடைபெற இருக்கிறது. எனவே இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 26, 2024

தூத்துக்குடியில் செல்போன் பழுது பார்க்கும் பயிற்சி

image

SBI சார்பில் சிறப்பு இலவச செல்போன் பழுது பார்க்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு முன்பதிவு நடந்து வருகின்றது. நாளை முன்பதிவு கடைசி நாளாகும். பயிற்சி பெற விரும்புவர்கள் முத்தையாபுரம் அபிராமி நகர் எஸ்.பி.ஐ-க்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர். 30 நாட்கள் பயிற்சி முடிந்த பிறகு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 26, 2024

தூத்துக்குடியில் நாளை மருத்துவ பரிசோதனை முகாம்

image

தூத்துக்குடி, சாகுபுரம் டிசிடபிள்யூ லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தூத்துக்குடியில் உள்ள கிளப் ஹவுஸ் இல் நாளை (செப்.27) , காலை 9:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை இலவச எலும்பு மற்றும் மூட்டு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இதில், மருத்துவரின் பரிந்துரைப்படி தேவைப்படும் நோயாளிகளுக்கு கை, கால், கழுத்து, மூட்டு, முழங்கால், முதுகு தண்டுவடம் பாதிப்பு, எலும்பு தேய்மானம் பரிசோதனை செய்யப்படுகிறது.

News September 26, 2024

மாலத்தீவு தோணி போக்குவரத்து துவக்கம்

image

தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து மாலத்தீவிற்கு சரக்கு ஏற்றி செல்லும் தோனி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த தோனி போக்குவரத்து கடல் காற்று சீசன் ஆன மே முதல் செப்டம்பர் வரை நிறுத்தப்படும். தற்போது கடல் காற்று சீசன் முடிவடைந்துள்ளதால் வரும் அக்டோபர் 1 முதல் மாலத்தீவிற்கு மீண்டும் தோணி சரக்கு போக்குவரத்து சேவை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 26, 2024

வடமாநில இளைஞர் கொலையில் திடீர் திருப்பம்

image

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பிகாஸ் என்ற வாலிபர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் குமரியை சேர்ந்த சுரேஷ் (45) என்பவரின் மனைவியிடம் பிகாஸ் தவறாக நடக்க முயன்று உள்ளார். இதனை தொடர்ந்து சுரேஷ், பிகாசை கொலை செய்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

News September 26, 2024

கனவு இல்லம் கடன் வழங்கும் முகாம்

image

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு பயனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நாளை (27) நடைபெற உள்ளது. தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் ,கோவில்பட்டி ,கயத்தாறு, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய வட்டங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

News September 26, 2024

ஆவணங்களை காலம் தாழ்த்தி வழங்கிய வங்கிக்கு அபராதம்

image

கோவில்பட்டியை சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டிராக்டர் வாங்க கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பி செலுத்திய பின்னர், வங்கி சுமார் 30 ஆண்டு காலம் தாழ்த்தி, அசல் ஆவணங்களை அவருக்கு வழங்கியுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் நீதிபதிகள் 5,10,000 ரூபாய் பணத்தை விவசாயிக்கு வழங்க உத்தரவிட்டனர்.