Tuticorin

News March 29, 2025

தூத்துக்குடியில் குடிநீர் பஞ்சத்தால் அழிந்த கிராமம்

image

தூத்துக்குடியில் ஒரு கிராமமே காணாமல் போய்விட்டது எனக் கூறினால் நம்பமுடிகிறதா?. ஆம், தூடி-நெல்லை சாலையில் பொட்டலூரணி அருகே உள்ள மீனாட்சிபுரம் தான் அது. ஒருகாலத்தில் செல்வ செழிப்பாக இருந்த இக்கிராமம், திடீரென ஏற்பட்ட கடும் தண்ணீர் பஞ்சத்தால் தற்போது வீடுகள் அனைத்தும் உடைந்தும் மரங்கள் முளைத்தும் ஆள் அரவமின்றி அனாதையாக காட்சியளிக்கிறது. *இவ்வூரை பற்றி தெரியுமா? தெரியாதவர்களுக்கு பகிரவும்.

News March 29, 2025

தூத்துக்குடி நீதிபதி அதிரடி உத்தரவு

image

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 15 பேர் ஜாமீன் பெற்றுக்கொண்டு பின்னர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தனர். இது குறித்து விசாரணை நடத்திய தூத்துக்குடி நீதிபதி கனிமொழி இந்த வழக்குகளில் ஆஜராகாமல் உள்ள 15 பேரும் குற்றவாளிகள் தான் என நேற்று (மார்ச்-28) அதிரடி உத்தரவிட்டார்.

News March 29, 2025

தூத்துக்குடி: குடும்ப தகராறில் தீக்குளித்து தற்கொலை

image

செய்துங்கநல்லூர் அருகே உள்ள விட்டிலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு ஈஸ்வரி (50) என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் ஈஸ்வரி திடீரென மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் நேற்று (மார்ச்-28) அதிகாலையில் அவர் பரிதாபமாக இறந்தார். போலீசார் விசாரணையில் குடும்ப தகராறில் தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

News March 29, 2025

தூத்துக்குடி வருகிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு

image

கனிமொழி எம்.பி யின் பெருமுயற்சியினால் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோருக்கான ‘புத்தொழில் களம்’ நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொள்ள உள்ளார் என தூத்துக்குடி எம்.பி கனிமொழி அறிவித்துள்ளார்.

News March 29, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News March 28, 2025

சீட்பெல்ட் அணிந்து பயணம் செய்ய தூத்துக்குடி போலீஸ் அறிவுரை

image

கார் போன்ற வாகனங்களில் பயணம் மேற்கொள்பவர்கள் தங்களது பாதுகாப்பிற்காக இருக்கைப் பட்டை எனும் சீட்பெல்ட் அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் விழிப்புணர்வு செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணத்தின் போது எதிர்பாராத விபத்து அல்லது உடனடியாக பிரேக் அழுத்தப்படும் போது பயணிகளை இருக்கையுடன் பிணைத்து பாதுகாக்க இந்த சீட்பெல்ட் பயன்படுத்தப்படுகிறது.

News March 28, 2025

தூத்துக்குடியில் மள்ளர் மீட்பு கழக தலைவர் கைது

image

கழுகுமலை அருகே கெச்சிலாபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவர் மள்ளர் மீட்பு கழகம் என்ற அமைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் மது போதையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த வெள்ளச்சி என்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது மட்டுமின்றி, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அப்பெண் கொடுத்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். *ஓர் அமைப்பு தலைவரின் இச்செயல் பற்றி உங்கள் கருத்து?

News March 28, 2025

தூத்துக்குடி மாவட்டத்தின் தனி சிறப்பு பற்றி தெரிஞ்சிக்கோங்க

image

தூத்துக்குடி மாவட்டத்திற்கென தனி சிறப்பு உள்ளது உங்களுக்கு தெரியுமா?. தமிழ்நாட்டிலயே தூத்துக்குடியில் மட்டும் தான் 4 வகை போக்குவரத்துக்களும் உள்ளன. ஆம், விமான சேவை, ரயில் சேவை, கப்பல் சேவை, பேருந்து சேவை என நால்வகை போக்குவரத்து சேவைகளும் உள்ளன. தற்போது, விண்வெளிக்கு செல்லும் ராக்கேட் ஏவு தளமும் வரவுள்ளது. சென்னை விமான சேவை கூட பக்கத்து மாவட்டமான காஞ்சிபுரத்தில் தான் உள்ளது. *நண்பர்களுக்கு பகிரவும்

News March 28, 2025

தூத்துக்குடியில் 46 இடங்களில் நாளை ஆர்ப்பாட்டம்!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்திற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.4,034 கோடி நிதி உதவியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 46 இடங்களில் நாளை(மார்ச் 29) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர்கள் கீதாஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்

News March 28, 2025

கோவில்பட்டியில் கனிமொழி எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம்!

image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.4,034 கோடி நிலுவையில் உள்ளது. இதைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் நாளை(மார்ச் 29) 46 ஊரக ஒன்றிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கோவில்பட்டி ஒன்றியத்தில் தூத்துக்குடி எம்பி கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வடக்கு மாவட்ட திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!