Tuticorin

News April 4, 2024

நாங்கள் ஓட்டு போட பணம் பெற மாட்டோம் 

image

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் ஓட்டு போட நாங்கள் பணம் பெற மாட்டோம் என்ற வாசகம் அடங்கிய பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தின் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 100%வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

News April 4, 2024

தூத்துக்குடியில் இன்று முதல் வாக்குப்பதிவு 

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் வீடுகளில் இருந்தே தபால் வாக்கு மூலம் வாக்களிக்க இந்திய தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 4000 பேர் வாக்களிக்க உள்ளனர். அவர்களின் வீடுகளுக்கு இன்று முதல் தேர்தல் அதிகாரிகள் சென்று தபால் வாக்குகளை சேகரிக்க உள்ளனர்.

News April 4, 2024

திருச்செந்தூரில் இன்று மறு வாக்கு எண்ணிக்கை

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் ராஜேஸ்வரன் என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் முரளி என்பவர் தோல்வியுற்றார். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இன்று மறுவாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News April 3, 2024

தூத்துக்குடி: பேக்கரிக்கு சீல் வைப்பு

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முத்தையாபுரத்தில் உள்ள ராஜன் என்பவர் பேக்கரியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு தின்பண்டங்கள் தயாரிக்கும் கூடம் மிகவும் சுகாதாரமற்ற முறையிலும், காலாவதியான பொருட்கள் இருப்பதையும் கண்டுபிடித்ததால் பேக்கரியை மூடி சீல் வைத்தனர்.

News April 3, 2024

தூத்துக்குடி: அடுத்த 3 மணி நேரத்திற்கு

image

நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர், தூத்துக்குடி, கயத்தாறு, விளாத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

News April 3, 2024

சித்திரைத் திருவிழா தொடக்கம்

image

குலசேகரப்பட்டினம் வடக்கூர் உள்ள அருள்மிகு வீர மனோகரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை அடுத்து கோவில் கொடி மரத்திற்கு பால் தயிர் சந்தனம் இளநீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருவிழா இம்மாதம் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

News April 3, 2024

தூத்துக்குடி-நெல்லை ரயில் திடீர் ரத்து

image

மதுரை கோட்டத்தில் இந்த மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் ஏழாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தூத்துக்குடியில் இருந்து மாலை 6: 25 மணிக்கு செல்லும் நெல்லை ரயிலும் நெல்லையிலிருந்து காலை 7: 35 க்கு புறப்படும் தூத்துக்குடி ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது .

News April 2, 2024

மேலூரில் ஒரு நிமிடம் மட்டுமே

image

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இன்று முதல் 16ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் முதியோர் ஊனமுற்றோர் நலன் கருதி இன்று முதல் 16ஆம் தேதி வரை மேலூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் இதைப்போல் மைசூர் எக்ஸ்பிரஸ் 15ஆம் தேதி வரை நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News April 2, 2024

தூத்துக்குடி அருகே விபத்து: ஒருவர் பலி

image

கோவில்பட்டி விநாயகர் நகரை சேர்ந்த நில புரோக்கர் துரை. நேற்று இவர் எட்டையாபுரம் குமார கிரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து எட்டையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 1, 2024

ஶ்ரீவைகுண்டம்: மீண்டும் மோடி பிரதமர் ஆவார்

image

ஶ்ரீவைகுண்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தாமாகா கட்சி வேட்பாளர் விஜயசீலனை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது “மீண்டும் மோடி பிரதமராக வருவார். அப்போது இந்தியா உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக நிச்சயம் மாறும்” என்று அவர் தெரிவித்தார். 

error: Content is protected !!