India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகில் உள்ள சிந்lலக்கரையில் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளருமான கனிமொழி கருணாநிதியை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கவுள்ளார். இந்த நிலையில் அவர் கலந்து கொள்ள உள்ள இடத்தில் எம்பி கனிமொழி இன்று நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தேர்தல் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், மார்ச் 23, 24 ஆகிய 2 நாட்கள் விடுமுறை நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 25ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தாக்கல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இதுவரை 5 சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி அய்யர் விளை ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் விஷ்வ ஜெயச்சந்திரன். நேற்று இவர் மது போதையில் அங்குள்ள ஒரு வீட்டின் சுவர் ஏரி குதித்து வீட்டிலிருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளார். இதை அடுத்து பக்கத்து வீட்டினர் அவரை பிடித்து தாளமுத்து நகர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலாம்குளம் கண்மாயில் ஆண் சடலம் கிடப்பதாக நாலாட்டின்புத்தூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதையடுத்து உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.அவர் ஆவல் நத்தத்தை சேர்ந்த குருசாமி என்பதும் கண்மாய்பாலத்தில் அமர்ந்திருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்ததும் தெரிய வந்தது.
தமிழகத்தில் இன்று (மார்ச்.22) காலை 10 மணி வரை தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் இன்று அதிகாலை 4 மணி முதல் மழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொரடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் சற்றுமுன் வெளியானது. அதன்படி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நைனார் நாகேந்திரன் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், தற்போது பாஜக கூட்டனியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) கட்சிக்கு தூத்துக்குடி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் சற்றுமுன் வெளியானது. அதன்படி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நைனார் நாகேந்திரன் போட்டியிட உள்ளார். மொத்தம் 9 தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை பாஜக தற்போது வெளியிட்டுள்ளது. கனிமொழியை எதிர்த்து நைனார் நாகேந்திரன் போட்டியிட உள்ளார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக சிவசாமி வேலுமணி அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி உங்கள் பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். அதன்படி இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் மொத்தமாக 32 மனுதாரர்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டது. இதில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமை வகித்தார்.
Sorry, no posts matched your criteria.