India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் துவங்கி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி நாளை காலை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி யிடம் மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
எட்டையாபுரம் அருகே சிந்தலக்கரையில் வைத்து நடைபெறும் பொதுக் கூட்டத்தில் வரும் 26 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று தூத்துக்குடி , ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக பந்தல் அமைக்கும் பணி வாகன நிறுத்துமிடம், குடிநீர்,கழிவறை போன்ற வசதிகள் செய்வதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, தூத்துக்குடியில்மருத்துவர் ரொவினா ரூத் ஜேன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால்,நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தாமாக தலைவர் எஸ் டி ஆர் விஜயசீலன் இன்று கட்சியின் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் நாளை (24.03.24) காலை 7.30 மணி முதல் தேரோட்டம் முடியும் வரை தெற்கு மாசி தெரு, மேல மாசி தெரு, திருச்செந்தூர் மெயின் ரோடு, மேல ரதவீதி, தெற்கு ரதவீதி ஆகிய பகுதிகளிலும், தேர் உயர் மின்பாதை அருகில் வரும் போது ஆழ்வார்திருநகரி, ஆழ்வார்தோப்பு, அப்பன்கோவில், வரதராஜபுரம் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு திமுக சார்பில் கனிமொழி எம்பி போட்டியிடுகிறார். நாளை (மார்ச் 24) தனது முதல் பிரச்சாரத்தை கனிமொழி எம்பி தொடங்க உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். மேலும், கலைஞர் அரங்கத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை தொடங்குவார் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று (மார்ச்.23) காலை 10 மணி வரை தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று அதிகாலை லேசான மழை பெய்ததால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி அருகே தண்டுபத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் சிலர் ஒன்றிணைந்து விசைப்படகுகள் மூலம் கடந்த 20-ம் தேதி இரவு கடலுக்கு சென்று கேராளா, குளச்சல் படகு வருகின்றதா? என சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கேரளா விசைப்படகு மற்றும் 5-குளச்சல் விசைப்படகு என மொத்தம் 6-படகுகளை பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் அந்த மீனவர்களை தாங்கள் தாக்கவில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.