Tuticorin

News March 21, 2024

2ம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக சிவசாமி வேலுமணி அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.

News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி உங்கள் பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 20, 2024

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். அதன்படி இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் மொத்தமாக 32 மனுதாரர்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டது. இதில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமை வகித்தார்.

News March 20, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வு இன்று தொடங்கியது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

News March 20, 2024

தூத்துக்குடி: திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

image

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட போல்பேட்டை பகுதியில் நேற்று திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலில் முகவர்கள் பணி செய்வது குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.

News March 20, 2024

தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு

image

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

News March 20, 2024

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika

News March 19, 2024

தூத்துக்குடியில் ஆலோசனை கூட்டம்

image

பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் அதிகாரிகள் முன்னிலையில் இன்று நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை வகித்து உரையாற்றினார்.

News March 19, 2024

தூத்துக்குடியில் காணாமல் போன 4 குழந்தைகள் மீட்பு

image

மார்ச்.1 அந்தோனியார் கோயிலில் கடத்தப்பட்ட 4 வயது குழந்தையை மீட்கும் போது 2023 அக்டோபர் மாதம் குலசேகரப்பட்டினம் தசராவில் காணாமல் போன குழந்தை உட்பட 4 குழந்தைகளை இன்று தனிப்படை போலீசார் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கருப்பசாமி மற்றும் ராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 19, 2024

அரசியல் கட்சியினருக்கு எச்சரிக்கை – ஆட்சியர்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் இன்று(மார்ச்.19) மாலை 3 மணிக்குள் கட்டடங்களின் சுவர்களில் உள்ள விளம்பரங்கள் அளிக்கப்பட வேண்டும். மேலும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும், இல்லையென்றால் அரசே அகற்றி அந்த செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளர் தேர்தல் கணக்கில் சேர்க்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!