Tuticorin

News March 23, 2024

தூத்துக்குடி: தமாகா வேட்பாளர் அறிவிப்பு

image

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தாமாக தலைவர் எஸ் டி ஆர் விஜயசீலன் இன்று கட்சியின் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 23, 2024

தூத்துக்குடி: நாளை மின் தடை

image

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் நாளை (24.03.24) காலை 7.30 மணி முதல் தேரோட்டம் முடியும் வரை தெற்கு மாசி தெரு, மேல மாசி தெரு, திருச்செந்தூர் மெயின் ரோடு, மேல ரதவீதி, தெற்கு ரதவீதி ஆகிய பகுதிகளிலும், தேர் உயர் மின்பாதை அருகில் வரும் போது ஆழ்வார்திருநகரி, ஆழ்வார்தோப்பு, அப்பன்கோவில், வரதராஜபுரம் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

News March 23, 2024

தூத்துக்குடி: மார்ச் 24ல் பிரச்சாரம் ஆரம்பம்

image

தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு திமுக சார்பில் கனிமொழி எம்பி போட்டியிடுகிறார். நாளை (மார்ச் 24) தனது முதல் பிரச்சாரத்தை  கனிமொழி எம்பி தொடங்க உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். மேலும், கலைஞர் அரங்கத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து  பிரச்சாரத்தை தொடங்குவார் என்றும் அவர் தெரிவித்தார். 

News March 23, 2024

தூத்துக்குடியில் லேசான மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று (மார்ச்.23) காலை 10 மணி வரை தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று அதிகாலை லேசான மழை பெய்ததால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

News March 23, 2024

தேர்தல் திமுக செயல் வீரர்கள் கூட்டம்

image

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி அருகே தண்டுபத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

News March 22, 2024

கேரளா மீனவர்களை தாக்கவில்லை

image

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் சிலர் ஒன்றிணைந்து விசைப்படகுகள் மூலம் கடந்த 20-ம் தேதி இரவு  கடலுக்கு சென்று கேராளா, குளச்சல் படகு வருகின்றதா? என சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கேரளா விசைப்படகு மற்றும் 5-குளச்சல் விசைப்படகு என மொத்தம் 6-படகுகளை பறிமுதல் செய்து  அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் அந்த மீனவர்களை தாங்கள் தாக்கவில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

News March 22, 2024

முதல்வர் வருகைக்கான நிகழ்ச்சி அரங்கு ஆய்வு

image

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகில் உள்ள சிந்lலக்கரையில் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளருமான கனிமொழி கருணாநிதியை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கவுள்ளார். இந்த நிலையில் அவர் கலந்து கொள்ள உள்ள இடத்தில் எம்பி கனிமொழி இன்று நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

News March 22, 2024

தூத்துக்குடியில் 2 நாட்கள் விடுமுறை

image

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தேர்தல் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், மார்ச் 23, 24 ஆகிய 2 நாட்கள் விடுமுறை நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 25ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தாக்கல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இதுவரை 5 சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 22, 2024

மது போதையில் சுவர் ஏறி குதித்தவர் கைது

image

தூத்துக்குடி அய்யர் விளை ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் விஷ்வ ஜெயச்சந்திரன். நேற்று இவர் மது போதையில் அங்குள்ள ஒரு வீட்டின் சுவர் ஏரி குதித்து வீட்டிலிருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளார். இதை அடுத்து பக்கத்து வீட்டினர் அவரை பிடித்து தாளமுத்து நகர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 22, 2024

பாலத்தில் தவறி விழுந்து முதியவர் பலி

image

கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலாம்குளம் கண்மாயில் ஆண் சடலம் கிடப்பதாக நாலாட்டின்புத்தூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதையடுத்து உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.அவர் ஆவல் நத்தத்தை சேர்ந்த குருசாமி என்பதும் கண்மாய்பாலத்தில் அமர்ந்திருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்ததும் தெரிய வந்தது.

error: Content is protected !!