India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (ஏப்18) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே, பொதுமக்கள் அவசர காலத்தில் குறிப்பிட்டுள்ள போலீசாரின் எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
சட்டப்பேரவையில் சுற்றுலா துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் ராஜேந்திரன் நேற்று பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, முள்ளகாடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நீர் சாகச விளையாட்டுகள் உள்ளிட்ட சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கின்றனர்.
தூத்துக்குடியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரி பிரிவில் 20 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதில் மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
தூத்துக்குடி கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் ராஜேஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கூட்டுறவு ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் பாடல் போட்டி நடத்தப்படுகிறது. கூட்டுறவு பற்றி 5 நிமிடம் ஒளிபரப்ப கூடிய பாடலை இசை உடன் அமைத்து வரும் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு பகுதிகளில் மானாவாரி பயிர்களான வத்தல், மக்காச்சோளம், பாசிப்பயிர், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக விளாத்திகுளம், புதூர் பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் முண்டு வத்தல் மற்றும் சம்பா வத்தல் சாகுபடி நடக்கிறது. கரிசல் நிலங்களில் முண்டு வத்தல் விளைவிக்கப்படுவதால் அதன் ருசி, காரத்தன்மை அதிகமாக இருக்கிறது.
தூத்துக்குடி கடற்கரையோரங்களில் அலையாத்தி காடுகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் ஆண்டுதோறும் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருகின்றன. அந்த வகையில் தற்போது பிளமிங்கோ பறவைகள் அதிக அளவில் வருகை தந்துள்ளன. பொதுமக்கள் பறவைகளை பார்த்து ரசிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பறவைகளுக்கு ஏதேனும் தொந்தரவு அளித்தால் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக வனத்துறை நேற்று தெரிவித்துள்ளது.
தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் நீதிபதி வழக்கினை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று எச்சரிக்கை விழிப்புணர்வு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் பொதுமக்கள் இணையங்களில் வரும் பரிசு கூப்பன் லக்கி வின்னர் பண வெகுமதி போன்ற போலியான விளம்பரங்களை பார்த்து அதன் லிங்குகளை கிளிக் செய்து ஏமாற வேண்டாம். இது போன்ற சைபர் கிரைம் தொடர்பாக 1930 க்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
கழுகுமலை அருகே உள்ள வள்ளிநாயகாபுரம் மேல தெருவை சேர்ந்த விவசாயி நாகராஜ் (53) . இவர் நேற்று உழவு பணி மேற்கொள்ள தனக்கு சொந்தமான டிராக்டரை ஓட்டிக்கொண்டு வள்ளிநாயகபுரம் – கழுகுமலை சாலையில் உள்ள நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது டிராக்டர் நிலை தடுமாறி ஓடையில் தலைகுப்புற கவிழ்ந்ததில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து 20கி.மீ தொலைவில் குலசேகரபட்டினத்தில் சிறப்பு மிக்க முத்தாரம்மன் கோவில் வங்கக் கடற்கரையின் அருகாமையில் அமைந்துள்ளது.இது மிகவும் பழமையான கோயில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் தசரா பண்டிகை மிகவும் விமர்சியாக கொண்டாப்படுகிறது.கிராமிய கலைகள் மற்றும் தெய்வ அவதாரங்களில் உருவங்கள் வேடம் அணிந்து பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகை புரிந்து அம்மனை வழிபடுகின்றனர்
Sorry, no posts matched your criteria.