Tuticorin

News March 29, 2024

தூத்துக்குடி: ரூ.25 லட்சம் பறிமுதல்

image

தூத்துக்குடி தொகுதியில் தேர்தலையொட்டி 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை வரை 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை 25 லட்சத்தி 6500 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 29, 2024

தூத்துக்குடி அருகே 6 பேர் கைது

image

தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி, அஜித்குமார், கார்த்திக் உட்பட 6 இளைஞர்கள் நேற்று அண்ணா நகர் பகுதியில் சாலையில் சென்ற ஒருவரிடம் அருவாளை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

News March 29, 2024

குடும்ப சண்டையில் தாக்கப்பட்ட மூதாட்டி

image

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் நேற்று அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரின் பக்கத்து வீட்டு மூதாட்டி ஐயங்கனி (60) என்பவர் சண்டையை தடுக்க முயன்றபோது அவர் தாக்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 28, 2024

தூத்துக்குடி: அமைச்சர் வாக்கு சேகரிப்பு

image

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் கனிமொழி எம்பி வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவரை ஆதரித்து இன்று இரவு சமூக நலத்துறை அமைச்சருக்கு கீதா ஜீவன் முத்தையாபுரம் முள்ளக்காடு பொட்டல்காடு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசின் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார்.

News March 28, 2024

தூத்துக்குடி: வங்கி அதிகாரி மீது தாக்குதல்

image

தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்தவர் சிவகுமார். இவர் பிரபல தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். சிவகுமார் சங்கராபுரத்தை சேர்ந்த பழனிகுமார் வீட்டிற்கு சென்று வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த வலியுறுத்தியுள்ளார். அப்போது, பழனி குமார், அவரது மகன் ஷியாம் ஆகியோர் சேர்ந்து இவரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 28, 2024

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அவர் அதிமுக வர்த்தக அணி செயலாளர் சி த செல்லப்பாண்டியன் உடன் முத்துநகர் கடற்கரை பகுதியில் நடை பயிற்சி செய்பவரிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

News March 28, 2024

கனிமொழி எம்.பி வேட்பு மனு ஏற்பு

image

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக கனிமொழி எம்.பி போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனு பரிசீலனை இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. வேட்பு மனு பரிசீலனையில் கனிமொழி எம்.பி யின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

News March 28, 2024

தூத்துக்குடி அருகே விபத்து: ஒருவர் பலி

image

தூத்துக்குடி பொன் சுப்பையா நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் ஜெகதீஷ் (33). இவர் நேற்று(மார்ச்.27) மோட்டார் பைக்கில் தூத்துக்குடி – மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது குறுக்குச் சாலை அருகே வந்தபோது எதிரே வந்த கார் அவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 28, 2024

த மா க வேட்பாளர் சொத்து மதிப்பு வெளியீடு

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் எஸ்.டி.ஆர் விஜயசீலன் நேற்று மனு தாக்கல் செய்தார். அதில் பிரமாண பத்திரத்தில் தனக்கு அசையும்,அசையா சொத்துக்கள் வங்கி கணக்கு என மொத்தம் ரூ.71 கோடியே 10 லட்சம் இருப்பதாகவும். மனைவி பெயரில் ரூ.13 கோடியை 80 லட்சம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

873 வாக்குச்சாவடி மையங்களில் முதலுதவி மையம்

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 873 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று கோடை வெயிலை கருத்தில் கொண்டும், வாக்காளர்களின் நலன் கருதியும் இந்த வாக்குச்சாவடி மையங்கள் அருகே முதலுதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!