India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் இம்மாதம் 15 ஆம் தேதி மின்னணு துறை சார்பில் மாணவர்களுக்கு எலெக்ட்ரா எலைட் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மாணவர்களின் ஆய்வுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள பொறியியல் மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவிஆணையர் மின்னல்கொடி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.19ஆம் தேதி தொழில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவு விடுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்கள் 93444 47888, 99408 97894 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டி கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் மற்றும் அருந்ததியர் சமுதாய மக்கள் என சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல சரியான பாதை அமைத்து தரவில்லை என்று கூறி தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் கோட்டாட்சியருக்கு மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த ஜான் கிஷோர் (35) ,ஜோன்ஸ் (24) ஆகிய இருவரும் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தபோது ஒரே பைக்கில் 3 பேர் அதி வேகமாக சென்றுள்ளனர். இதனை 2 பேரும் கண்டித்துள்ளனர். இதையடுத்து பைக்கில் வந்த 3 பேரும் சேர்ந்து ஜான் கிஷோர், ஜோன்ஸ் ஆகிய 2 பேரை நேற்று கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டப்பிடாரத்தை சேர்ந்தவர் சந்தனம் மாரியப்பன். இவரது மகன் மகேஷ் குமார் கடந்த மாதம் விபத்தில் உயிரிழந்தார். நேற்று 30 ஆவது நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு துக்கம் தாளாமல் சந்தன மாரியப்பன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்மபவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 85 வயதை கடந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 4177 பேர் வீடுகளில் இருந்தே வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பணி நேற்று துவங்கியது. தூத்துக்குடியில் தேர்தல் அலுவலர்கள் மூத்த குடிமக்கள் வீடுகளுக்கே சென்று அவர்களின் தபால் வாக்குகளை வாக்குப்பெட்டியில் பதிவு செய்தனர்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் தூத்துக்குடியில் உள்ள வஉசி பொறியியல் கல்லூரியில் பாதுகாக்கப்படும். வாக்கு எண்ணிக்கையும் அங்கு தான் நடைபெறவுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை இன்று மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் மகாராஜா. இவர் நேற்று கோவில்பட்டி வந்துவிட்டு ஊர் திரும்புவதற்காக தனது உறவினர் புவனேஸ்வரன் உடன் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது கார் ஒன்று மோதி காயமடைந்த இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை ஒட்டி உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்த 534 பேர் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளதாக நேற்று ஆட்சியரின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள கீழ வைப்பார் கிராமம் வடக்கு காலனியைச் சேர்ந்த ஏசுதாஸ் மகள் மோனிஷா (23) இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே அவரது தாயார் மோனிஷாவுக்கு திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். இதனால், மனமுடைந்த மோனிஷா நேற்று தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.