India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்தவர் சிவகுமார். இவர் பிரபல தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். சிவகுமார் சங்கராபுரத்தை சேர்ந்த பழனிகுமார் வீட்டிற்கு சென்று வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த வலியுறுத்தியுள்ளார். அப்போது, பழனி குமார், அவரது மகன் ஷியாம் ஆகியோர் சேர்ந்து இவரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அவர் அதிமுக வர்த்தக அணி செயலாளர் சி த செல்லப்பாண்டியன் உடன் முத்துநகர் கடற்கரை பகுதியில் நடை பயிற்சி செய்பவரிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக கனிமொழி எம்.பி போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனு பரிசீலனை இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. வேட்பு மனு பரிசீலனையில் கனிமொழி எம்.பி யின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி பொன் சுப்பையா நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் ஜெகதீஷ் (33). இவர் நேற்று(மார்ச்.27) மோட்டார் பைக்கில் தூத்துக்குடி – மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது குறுக்குச் சாலை அருகே வந்தபோது எதிரே வந்த கார் அவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் எஸ்.டி.ஆர் விஜயசீலன் நேற்று மனு தாக்கல் செய்தார். அதில் பிரமாண பத்திரத்தில் தனக்கு அசையும்,அசையா சொத்துக்கள் வங்கி கணக்கு என மொத்தம் ரூ.71 கோடியே 10 லட்சம் இருப்பதாகவும். மனைவி பெயரில் ரூ.13 கோடியை 80 லட்சம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 873 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று கோடை வெயிலை கருத்தில் கொண்டும், வாக்காளர்களின் நலன் கருதியும் இந்த வாக்குச்சாவடி மையங்கள் அருகே முதலுதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ராணுவத்தில் பணியாற்றும் 2868 பேருக்கு தபால் ஓட்டு உள்ளது. இவர்கள் ஆன்லைனில் வாக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .இறுதி வேட்பாளர் பட்டியல் முடிந்ததும் ஆன்லைனில் அனுப்பி வைக்கப்படும் தபால் ஓட்டுக்களை ராணுவ வீரர்கள் பதிவிறக்கம் செய்து வாக்களித்து அதனை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு கடந்த 23 ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 795 அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளவில்லை. இவர்களுக்கு காரணம் கேட்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது .மேலும் 2 நாட்களில் பதிலளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பார்வையாளராக திவேஷ் ஷெஹரா நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் செலவினங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை போன்றவைகளை இவரது கைபேசி எண் 8925921303 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று தெரிவித்துள்ளார் .
தூத்துக்குடி எம்பி வேட்பாளர் கனிமொழி தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து 290 மதிப்பிலான 3 கார்கள் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் 704 கிராம் தங்கம், 13.03 காரட் வைரம் உள்ளிட்டவைகள் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த நகைகளின் மதிப்பு ரூ.55 லட்சத்து 37 ஆயிரத்து 455 ஆகும்.
Sorry, no posts matched your criteria.