Tuticorin

News October 10, 2024

ரத்தன் டாடா மறைவு கனிமொழி எம்பி இரங்கல்

image

தூத்துக்குடி எம்.பி. கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், ரத்தன் டாடாவின் மறைவு இந்தியாவுக்கு பெரும் இழப்பு. அவரது நேர்மை, சமூக அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு தலைமை எப்போதும் நினைவில் இருக்கும். அவருடைய பணிவு மற்றும் எளிமையால் நான் எப்போதும் வியந்திருக்கிறேன். தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பும், அவரது பரோபகார மனப்பான்மையும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றுள்ளார்.

News October 10, 2024

தூத்துக்குடி இளைஞர்களே! ரேஷன் கடையில் வேலை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலை கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. தகுதிவுள்ள விண்ணப்பதாரர்கள் WWW.drbtut.in என்ற இணையதளம் மூலம் வரும் நவம்பர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News October 10, 2024

நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி

image

தூத்துக்குடி மீன்வள கல்லூரியில் நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பில் சிறந்த மேலாண்மை முறைகள்” குறித்த ஒரு நாள் பயிற்சி நடத்தபட உள்ளது. தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிலதா மீன்வள பல்கலைகழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள விரிவாக்கம் மற்றும் புள்ளியியல் துறை வாயிலாக வருகின்ற 21ம் தேதி நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 10, 2024

200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

image

சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் பகுதியில் ரகசிய இடத்தில் வைத்து புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் புகையிலை வியாபாரிகளான செல்வசேகர், சதீஷ் உட்பட 5 பேரை கைது செய்தனர். மேலும், 200 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர்.

News October 9, 2024

அதிக அளவில் வண்டல் மண் ஆட்சியர் அறிவுறுத்தல்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 875 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க 2299 விவசாயிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். நீர்நிலைகளில் அதிக அளவில் வண்டல் மற்றும் கரம்பை மணி எடுத்தால் மட்டுமே குளங்களில் ஆழம் அதிகமாகி மழை நீரை தேக்க முடியும் எனவே விவசாயிகள் அதிக அளவில் வண்டல் மண் எடுக்க அறிவுறுத்தப் படி அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 9, 2024

இம்மானுவேல் சேகரனுக்கு அமைச்சர் வாழ்த்துரை

image

ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலையிலுள்ள மக்களின் உரிமைகளுக்காக போராடிய சுதந்திர போராட்டத்தின் வீரர், தியாகி இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழா இன்று தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் இமானுவேல் சேகரன் புகழைப் போற்றுவோம் என்று தனது வலைதளத்தில் இன்று பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

News October 9, 2024

புத்தகத் திருவிழாவில் இன்று பேச்சாளர்களின் உரை நிகழ்ச்சி

image

தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோட்டில் அமைந்துள்ள சங்கரப்பேரியின் சாலை பிரிவு பகுதியருகே, தற்போது புத்தக திருவிழா நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், இன்று (அக்.09) சிறப்பு பேச்சாளர்களாக எழுத்தாளர் நெல்லை கவிநேசன் மற்றும் நல்லாசிரியர் சிவகளை மாணிக்கம் ஆகியோர் மாலை 6 மணிக்கு உரையாற்ற உள்ளனர். அனைவருக்கும் அனுமதி இலவசம் என்று மாவட்ட நிர்வாக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 9, 2024

இம்மானுவேல் சேகரனார் எம் பி புகழாரம்

image

தூத்துக்குடியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று(அக்.09) தனது முகநூல் பக்கத்தில், தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாளை ஒட்டி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காவே தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்த தீரர், சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்த நாளில் அவர் கண்ட சமத்துவ சமூகம் என்ற கனவை நிறைவேற்ற உறுதியேற்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News October 9, 2024

வேம்பு நடவு செய்தால் ரூ.17,000 மானியம்

image

தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வரோக நிவாரணி என்று அழைக்கப்படும் வேம்பினை விவசாயிகள் புதிதாக நடவு செய்தால் தேசிய உணவு என்னை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு 400 மரக்கன்றுகள் என்ற அளவில் ரூ.17,000 மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News October 9, 2024

தூத்துக்குடியில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பாக சீரிளமை திறம் கொண்ட அன்னை தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.