Tuticorin

News April 1, 2024

தூத்துக்குடி: கனிமொழி வாகனம் திடீர் சோதனை

image

மக்களவை தேர்தலை ஒட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்திற்காக நெல்லை சென்றபோது மூன்றாவது மைல் அருகே அவரது வாகனத்தை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News April 1, 2024

தூத்துக்குடி அருகே விபத்து: ஒருவர் பலி

image

குலசேகரப்பட்டினத்தை சேர்ந்தவர் மாதேஷ் .நேற்று இவர் தனது நண்பர் விஜய்யுடன் இருசக்கர வாகனத்தில் பரமன்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் ஓரத்தில் இருந்த அறிவிப்பு பலகையின் மீது பைக் மோதியதில் மாதேஷ் சம்பவ இடத்திலே பலியானார். விஜய் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 31, 2024

2,750 பேருக்கு தபால் வாக்கு

image

தூத்துக்குடி தொகுதியில் ராணுவம், துணை ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு  தபால் மூலம் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று 2,750 பேருக்கு தபால் வாக்கு அளிப்பதற்கான லிங்க் மாவட்ட தேர்தல் அதிகாரியால் அனுப்பப்பட்டுள்ளது. அந்த லிங்க் மூலம் தனது வாக்கினை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News March 31, 2024

தூத்துக்குடி: 9 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

image

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை சூசை பாண்டியா புரத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது 9 வயது மகள் சிவநிகிலா நேற்று குளியல் அறையில் கழுத்தில் டவலை கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று துண்டு கழுத்தில் இறுக்கி மயங்கி விழுந்தார்.  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

News March 31, 2024

தூத்துக்குடியில் தேர்வில் மாற்றம்

image

6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தேதியில் மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல்.10 அன்று நடைபெற இருந்த அறிவியல் தேர்வு 22.4.2024 அன்றும், 12.4.2024 அன்று நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு 23.4.2024 அன்றும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. இதனால் கோடை விடுமுறை தள்ளிப்போவதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

News March 31, 2024

கைநழுவிய சின்னங்களை கைப்பற்றிய சுயேட்சைகள்

image

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்காத சின்னங்களை சுயேட்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் சுயேட்சை வேட்பாளர் அருணா தேவிக்கும்,மக்கள் நீதி மையத்தின் டார்ச் லைட் சின்னம் சுயேட்சை வேட்பாளர் என்.பி. ராஜாவுக்கு கிடைத்துள்ளது.

News March 31, 2024

தூத்துக்குடி அருகே கோர விபத்து

image

சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சேகர்.அவரது மனைவி நித்தியகலா,மகள் தீக்ஷித், மகன் ரித்திக் மற்றும் வனஜா,,கார்த்திக் ஆகியோர் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்னை திரும்பும் போது பழையகாயல் அருகே கார் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது. இதில் 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

News March 30, 2024

வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு

image

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவது இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள 28 வேட்பாளர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி மற்றும் தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

News March 30, 2024

தூத்துக்குடி: 28 வேட்பாளர்கள் போட்டி

image

தூத்துக்குடி மக்களவை தொகுதிக்குட்பட்ட வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து கடந்த 28ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில் 31 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்நிலையில் இன்று 3 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்று கொண்டனர். இதனை அடுத்து தூத்துக்குடி தொகுதியில் திமுக அதிமுக த மா கா நாம் தமிழர் கட்சி வேட்பாளர் என மொத்தம் 28 பேர் போட்டியிடுகின்றனர்.

News March 30, 2024

தூத்துக்குடி: கொலை வெறி தாக்குதல்

image

தூத்துக்குடி மாதவன் நாயர் காலனியை சேர்ந்தவர் மீனவர் முனியசாமி. இவர் கடந்த 28ஆம் தேதி இரவு திரேஸ்புரம் கடற்கரையில் மதுபோதையில் இருந்த தனது நண்பர்கள் தமிழ்ச்செல்வன், முனீஸ்வரனை தட்டி கேட்டுள்ளார் . இதனால் ஆத்திரமடைந்த இருவர் முனியசாமி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். வடபாகம் போலீசார் நேற்று இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!