Tuticorin

News April 6, 2024

மாமனார் தாக்கியதில் மருமகன் பலி

image

தூத்துக்குடி மாவட்டம் எத்திலநாயக்கன்பட்டியை   சேர்ந்தவர் பிரபாகரன். இவர் நேற்று முன்தினம் தனது மனைவியை பார்ப்பதற்காக கயத்தாறு அருக வடக்கு சுப்பிரமணியபுரத்திற்கு சென்ற போது அவரது மாமனார் குருசாமி உட்பட 3 பேர் இவரை தாக்கினர். இதில் காயம் அடைந்த பிரபாகரன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கயத்தாறு போலீஸார் குருசாமி உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 6, 2024

திருச்செந்தூரில் ஏப்.14 இல் கொடியேற்றம்

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை வசந்த திருவிழா வரும் 14 ஆம் தேதி விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த திருவிழாவானது வரும் 14 ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். திருவிழா நாட்களில் தினம்தோறும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு

image

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி வகுப்பு இன்று ஏப்.5 தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜேன் கிறிஸ்டி உடனிருந்தனர்.

News April 5, 2024

லாரியில் தவறி விழுந்த கிளீனர் பலி

image

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சீனிவாஸ். இவர் தூத்துக்குடி புதூர் பாண்டியா புரத்தில் உள்ள லாரி செட்டில் கிளீனர் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று லாரியில் தார்பாய் கட்டி கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 5, 2024

அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு தள்ளிவைப்பு

image

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கின் விசாரணையை இம்மாதம் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News April 5, 2024

ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை – பரபரப்பு தகவல்

image

கோவில்பட்டி விநாயகர் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் துரை(57).இவர் கடந்த 1 ஆம் தேதி எட்டயபுரம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இது குறித்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. துரையை கொலை செய்தால் பல கோடி சொத்து தனக்கு கிடைக்கும் என அவரது மருமகன் உதயகுமார் 3 பேருடன் லாரியை ஏற்றி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 5, 2024

நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(ஏப்.5) மற்றும் நாளை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பை சாத்தான்குளம் பார் கவுன்சில் சங்க தலைவர் ஜெகன் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.

News April 4, 2024

தூத்துக்குடி: அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

தூத்துக்குடியில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர், தூத்துக்குடி, விளாத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!