India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை ஒட்டி உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்த 534 பேர் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளதாக நேற்று ஆட்சியரின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள கீழ வைப்பார் கிராமம் வடக்கு காலனியைச் சேர்ந்த ஏசுதாஸ் மகள் மோனிஷா (23) இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே அவரது தாயார் மோனிஷாவுக்கு திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். இதனால், மனமுடைந்த மோனிஷா நேற்று தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். அந்த வகையில் இன்று வார விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு நேற்று மாலை ஒரு லாரி மதுரை சென்று கொண்டிருந்தது. கோவில்பட்டி அருகே உள்ள சாலைப்புதூர் விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய இரண்டு லாரி ஓட்டுநர்களையும் பலத்த காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி 288 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 318 நுண் பார்வையாளர்கள் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேற்று தெரிவித்துள்ளார்.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் இருக்கிறதா என்பது குறித்து பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு சோதனைகள் நடைபெற்றது. இந்த சோதனையானது வரும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தூத்துக்குடி மாவட்டம் வந்தார். கோவில்பட்டி எல்லையில் அவருக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி அண்ணா நகர் மேற்கு பகுதியில் மாநகராட்சி சார்பில் அவசரகதியில் தார் சாலை அமைக்கும் பணி தற்போது துவங்கி உள்ளது. இங்கு பாதாள சாக்கடை அமைக்காமல் சாலை அமைக்கும் பணி துவங்கி உள்ளதால் பின்பு பாதாள சாக்கடைக்கு மீண்டும் சாலையை உடைக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே பாதாள சாக்கடை அமைத்துவிட்டு சாலை பணிகளை துவங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 286 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 2 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.