India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மார்ச்.1 அந்தோனியார் கோயிலில் கடத்தப்பட்ட 4 வயது குழந்தையை மீட்கும் போது 2023 அக்டோபர் மாதம் குலசேகரப்பட்டினம் தசராவில் காணாமல் போன குழந்தை உட்பட 4 குழந்தைகளை இன்று தனிப்படை போலீசார் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கருப்பசாமி மற்றும் ராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் இன்று(மார்ச்.19) மாலை 3 மணிக்குள் கட்டடங்களின் சுவர்களில் உள்ள விளம்பரங்கள் அளிக்கப்பட வேண்டும். மேலும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும், இல்லையென்றால் அரசே அகற்றி அந்த செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளர் தேர்தல் கணக்கில் சேர்க்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று(மார்ச்.18) திருச்செந்தூர் ஆலந்தலை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த வேனை மறித்து சோதனையிட்டனர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி 405 சேலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்து திருச்செந்தூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி பிரேன் நகரை சேர்ந்தவர் முருகன். இவருக்கும் இவரது சகோதரர்களுக்கும் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக நேற்று மாலை முருகனின் சகோதரர் மாரிமுத்து உட்பட 8 பேர் வீடு புகுந்து முருகனையும் அவரது மனைவியையும் தாக்கியதுடன் வீட்டில் இருந்த பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுபற்றி தென்பாகம் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2024 மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக போட்டியிடவுள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் மீண்டும் திமுகவே களமிறங்கவுள்ளது. இந்த முறையும் தூத்துக்குடியில் கனிமொழியே போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். இவர்,தற்போது தென் சென்னை, புதுச்சேரி, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019 தேர்தலில் இவர் தூத்துக்குடியில் போட்டியிட்ட நிலையில் மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிடுவாரா?
பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் விஸ்வரூப தரிசனத்தில் கலந்து கொண்டார், திருச்செந்தூர் வந்த அவரை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டாட்சியராக பணியாற்றிய குருசந்திரன் என்பவர் பதவி உயர்வு பெற்று மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாறுதலில் சென்று விட்டார். இந்த நிலையில் புதிய கோட்டாட்சியராக சுகுமாரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரை சக அலுவலக அதிகாரிகள், வட்டாட்சியர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு 54 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஒளிப்பதிவாளர், 5 அலுவலர்கள் கொண்டு 3 சுற்றுகளாக பறக்கும் படை செயல்படும் என ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு மூன்று பறக்கும் படை நியமனம் செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.