Tuticorin

News March 28, 2024

873 வாக்குச்சாவடி மையங்களில் முதலுதவி மையம்

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 873 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று கோடை வெயிலை கருத்தில் கொண்டும், வாக்காளர்களின் நலன் கருதியும் இந்த வாக்குச்சாவடி மையங்கள் அருகே முதலுதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

2868 பேருக்கு தபால் ஓட்டு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ராணுவத்தில் பணியாற்றும் 2868 பேருக்கு தபால் ஓட்டு உள்ளது. இவர்கள் ஆன்லைனில் வாக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .இறுதி வேட்பாளர் பட்டியல் முடிந்ததும் ஆன்லைனில் அனுப்பி வைக்கப்படும் தபால் ஓட்டுக்களை ராணுவ வீரர்கள் பதிவிறக்கம் செய்து வாக்களித்து அதனை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2024

795 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு கடந்த 23 ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 795 அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளவில்லை. இவர்களுக்கு காரணம் கேட்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது .மேலும் 2 நாட்களில் பதிலளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 27, 2024

தூத்துக்குடி – தேர்தல் பார்வையாளர் நியமனம்

image

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பார்வையாளராக திவேஷ் ஷெஹரா நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் செலவினங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை போன்றவைகளை இவரது கைபேசி எண் 8925921303 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று தெரிவித்துள்ளார் .

News March 27, 2024

தூத்துக்குடி: கனிமொழி சொத்து மதிப்பு எவ்வளவு?

image

தூத்துக்குடி எம்பி வேட்பாளர் கனிமொழி தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து 290 மதிப்பிலான 3 கார்கள் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் 704 கிராம் தங்கம், 13.03 காரட் வைரம் உள்ளிட்டவைகள் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த நகைகளின் மதிப்பு ரூ.55 லட்சத்து 37 ஆயிரத்து 455 ஆகும்.

News March 27, 2024

தூத்துக்குடி: மகன்கள் கைது: தாய் தற்கொலை

image

தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த முனியசாமி என்பவரை அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சதீஷ் சுதாகர் தங்களது தாயுடன் தகாத உறவு வைத்திருந்ததற்காக நேற்று முன்தினம் வெட்டிக்கொலை செய்தனர். இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களின் தாயார் நிர்மலா நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

News March 27, 2024

கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்

image

தூத்துக்குடி முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சக்தி முருகன் என்பவருக்கு பணம் கடனாக கொடுத்துள்ளார். இந்த பணத்தை நேற்று அருள்ராஜ் திரும்பி கேட்ட பொழுது அவரை சக்தி முருகன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது பற்றி முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்

News March 26, 2024

அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு தள்ளிவைப்பு

image

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் தொடர்ந்த வழக்கு, தூத்துக்குடியில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த பொழுது நீதிபதி வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் ஐந்தாம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

News March 26, 2024

அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு வெளியானது

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சிவசாமி வேலுமணி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவரின் பெயரில் ரூ.1.18 கோடி அசையும் சொத்துகளும், ரூ.7.55 கோடி அசையா சொத்துகளும், மனைவி ஆனந்தி பிரபா பேரில் ரூ.14.35 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளதாக அவர் வேட்பு மனுவில் தாக்கல் செய்துள்ளார்.

News March 26, 2024

படகில் சென்று வாக்காளர் விழிப்புணர்வு

image

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் பெரியதாழையில் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் படகில் சென்று நடுக்கடலில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் படகில் மகளிர் சுய உதவி குழுவினர் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கும் பதாகைகளை பிடித்தபடி கோஷங்களை முழங்கினர்.

error: Content is protected !!