India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை கோட்டத்தில் இந்த மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் ஏழாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தூத்துக்குடியில் இருந்து மாலை 6: 25 மணிக்கு செல்லும் நெல்லை ரயிலும் நெல்லையிலிருந்து காலை 7: 35 க்கு புறப்படும் தூத்துக்குடி ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது .
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இன்று முதல் 16ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் முதியோர் ஊனமுற்றோர் நலன் கருதி இன்று முதல் 16ஆம் தேதி வரை மேலூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் இதைப்போல் மைசூர் எக்ஸ்பிரஸ் 15ஆம் தேதி வரை நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவில்பட்டி விநாயகர் நகரை சேர்ந்த நில புரோக்கர் துரை. நேற்று இவர் எட்டையாபுரம் குமார கிரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து எட்டையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஶ்ரீவைகுண்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தாமாகா கட்சி வேட்பாளர் விஜயசீலனை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது “மீண்டும் மோடி பிரதமராக வருவார். அப்போது இந்தியா உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக நிச்சயம் மாறும்” என்று அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மொத்தம் 1,622 வாக்குச்சாவடிகள் இருந்தன. வாக்காளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் கூடுதலாக தலா ஒரு வாக்குச்சாவடிகள் அமைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது .இதற்கு தேர்தல் ஆணையம் இன்று ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து தற்போது வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,624 ஆக உயர்ந்துள்ளது.
மக்களவை தேர்தலை ஒட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்திற்காக நெல்லை சென்றபோது மூன்றாவது மைல் அருகே அவரது வாகனத்தை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குலசேகரப்பட்டினத்தை சேர்ந்தவர் மாதேஷ் .நேற்று இவர் தனது நண்பர் விஜய்யுடன் இருசக்கர வாகனத்தில் பரமன்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் ஓரத்தில் இருந்த அறிவிப்பு பலகையின் மீது பைக் மோதியதில் மாதேஷ் சம்பவ இடத்திலே பலியானார். விஜய் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தொகுதியில் ராணுவம், துணை ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று 2,750 பேருக்கு தபால் வாக்கு அளிப்பதற்கான லிங்க் மாவட்ட தேர்தல் அதிகாரியால் அனுப்பப்பட்டுள்ளது. அந்த லிங்க் மூலம் தனது வாக்கினை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை சூசை பாண்டியா புரத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது 9 வயது மகள் சிவநிகிலா நேற்று குளியல் அறையில் கழுத்தில் டவலை கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று துண்டு கழுத்தில் இறுக்கி மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.
6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தேதியில் மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல்.10 அன்று நடைபெற இருந்த அறிவியல் தேர்வு 22.4.2024 அன்றும், 12.4.2024 அன்று நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு 23.4.2024 அன்றும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. இதனால் கோடை விடுமுறை தள்ளிப்போவதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.