India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பனிமய மாதா பேராலயம் கத்தோலிக்க திருச்சபை, 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகிசிய பாணியில் கட்டப்பட்டதாகும். இது கிறித்துவர்களின் யாத்திரைத் தலமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள 6 பசிலிக்கா ஆலயங்களில் இதுவும் ஒன்று. அன்னை மேரி சிலைக்கு தங்க காரில் ஊர்வலம் எடுத்து பத்துநாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. 2017 இல் இதில் ஒரு சில இடங்கள் புதுப்பிக்கப்பட்டது.
தேசிய விடுமுறை தினமான மே.1 இல் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். அதன்படி நேற்று தொழிலாளர் துறை அமலாக்க உதவி ஆணையர் மின்னல் கொடி தலைமையிலான அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் நேற்று ஆய்வு நடத்தினர். அதில் 73 நிறுவனங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த அப்துல் என்பவர் நேற்று மாலை அடைக்கலாபுரம் வழியாக திருச்செந்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் முன் பகுதியில் இருந்து புகை கிளம்பியது. இதனால் காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கிய போது கார் முழுவதும் தீயில் எரிந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அய்யாசாமி காலனியைச் சேர்ந்தவர் ஜெபஸ்டி எஸ்தர் . (52 )இவர் வெளியூர் சென்று விட்டு நேற்று வீடு திரும்பி உள்ளார். அப்போது இவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 37 பவுன் தங்க நகை திருடு போனது தெரிய வந்தது. எஸ்தர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சி பகுதியில் உள்ள பழமையான கோவிலான வீரபாண்டீஸ்வரர், லட்சுமி நரசிம்மர் கோயிலை இந்து அறநிலையத்துறை சார்பில் புனரமைத்து கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை இன்று ஆய்வு செய்தனர். இதில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சகாயராஜ் திருச்செந்தூர் சென்றுவிட்டு குடும்பத்தினருடன் நேற்று வேனில் ஊர் திரும்பி கொண்டு இருந்தார். வேன் உடன்குடி அருகே கல்லாமொழி அருகே எதிரே வந்த மற்றொரு வேனுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் சகாயராஜின் மனைவி சுமதி சம்பவ இடத்திலேயே பலியானார். 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் முன்பு ஒன்றாவது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சரிவர குடிதண்ணீர் வரவில்லை என குற்றம் சாட்டி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை காட்டினர். இதில் பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விஜயாபுரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (மே-2) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கீழ பாண்டவர்மங்கலம், சண்முக சிகாமணிநகர், ராஜிவ்நகர், சுப்பிரமணியபுரம், ஸ்ரீராம் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுபவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் 18005995950 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவித்தவர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக கருதப்படும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று குரு பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதில் சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.