India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கோவில்பட்டி நிலையத்தில் இருந்து சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதில், தீயணைப்பு வீரர்களுக்கு ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு சால்வை அணிவித்து நினைவு பரிசை வழங்கி பாராட்டினார். இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ். ஜேசிஐ நிர்வாகிகள் வெங்கடேஷ் ,சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எட்டயபுரம் அருகே வெள்ளையம்மாள்புரம் சேர்ந்தவர் லட்சுமி பிரியா.வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் விஜயா. உறவினர்களான இவர்கள் இருவரும் நேற்று இரவு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர்.எட்டையபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது,மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த கார்,இவர்களது வாகனம் மீது மோதியது.பலத்த காயம் அடைந்த 2 பேரும், அரசு மருத்துவமனையில் செத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயா இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தி தோப்பில் உள்ள தீப்பெட்டி ஆலையில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஆலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தீப்பற்றக்கூடிய பொருட்களை பாதுகாப்பான முறையில் தீப்பெட்டி ஆலையில் வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே நக்கல கோட்டையில் கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற ஒரு பெண்ணின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்தனர். இதனை ஒரு தொலைக்காட்சி இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளதால் முத்தையாபுரம் மற்றும் சிப்காட் மின் விநியோக பிரிவுக்குட்பட்ட முத்துநகர் ஊரணி ஒத்த வீடு, வாழைக்காய் சந்தை ,காதர் மீரா நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நாளை(மே.4) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் கோவில்பட்டி, தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அஞ்சலகங்கள் கோவில்பட்டி தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதன் அருகே உள்ள பருவக்குடி, குருவிகுளம் ஆகிய பகுதிகளில் நாளை(மே.4) ஆதார திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சார்ந்த ஜோ வில்லவராயர் என்பவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். அதன் பின்னர் தனக்கு உடல் நிலைக் குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதற்கான தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் தராத நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.5,81,458 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் அனுமதி பெறாமல் முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தால் அபராத தொகை விதிக்கப்படுவதுடன் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதனை மீறி எவரேனும் முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றால் அபராதம் விதிப்பதுடன் காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
மதுரை சங்கிமங்கலத்தைச் சேர்ந்த 13 பேர் விளாத்திகுளம் அருகே உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளனர். கீழஈரால் பகுதியில் சென்ற போது சுற்றுலா வேனின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 13 காயமடைந்தனர். இதனையடுத்து, காயமடைந்த 13 பேரும் எட்டயாபுரம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி அய்யாசாமி காலனியைச் சேர்ந்தவர் அசரியா மனைவி எஸ்தர் (52). இவர் கடந்த 26 ஆம் தேதி கோயமுத்தூரில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோயமுத்தூர் சென்றுவிட்டு நேற்று காலை ஊர் திரும்பினார். அப்போது அவரது வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 36 பவுன் நகைகள் திருடு போயிருந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.