Tuticorin

News May 10, 2024

129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

image

தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 94.35% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 30 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 35 ம் தனியார் பள்ளிகள் 64 என மொத்தம் 129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

News May 10, 2024

தூத்துக்குடி அருகே விபத்து: ஒருவர் பலி

image

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி அருகே உள்ள வர்த்தக ரெட்டி பட்டி கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் மந்திரமூர்த்தி (66). ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர். இவர் நேற்று தூத்துக்குடி – திருநெல்வேலி சாலையில் வாகைகுளம் டோல்கேட் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் பைக் மோதியதில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 10, 2024

தூத்துக்குடி 12ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.09% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 86.62 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.55- சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று தூத்துக்குடி மாவட்டம் 12ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

News May 10, 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் 94.39 % தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 94.39 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 91.56 .% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.03 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 10, 2024

மாணவர்களே வாய்ப்பை நழுவ விடாதீர்கள்

image

தூத்துக்குடியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டய படிப்பில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதலாம் ஆண்டு பட்டய படிப்பிலும் ,பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக 2 ஆம் ஆண்டு சேர்க்கையிலும் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 10, 2024

மருத்துவமனை அருகே சாக்கடை நீர்

image

திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள சாலையில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை நீர் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் சாலையில் செல்வோரும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளும் துர்நாற்றத்தால் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாக்கடை நீரால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 9, 2024

மாணவர்கள் சான்றிதழ்கள் பெற சிறப்பு ஏற்பாடு

image

பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கு வழிகாட்டும் நிகழ்ச்சியான கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை மறுநாள் (11) தூத்துக்குடி மாணிக்க மஹாலில் வைத்து நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது மாணவர்களுக்கு தேவையான வருவாய், இருப்பிட சான்றிதழ் போன்றவை பெறுவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

News May 9, 2024

புதைந்த உடலை தோண்டி எடுத்து விசாரணை

image

தூத்துக்குடி அருகே உள்ள ஐய்யனடைப்பை சேர்ந்தவர் ஆஷா பைரோஸ். இவர் தனது மகன் குலாம் காதருடன் வசித்து வந்தார். மனநலம் குன்றிய தாய் ஆஷா உயிரிழந்து 6 நாட்கள் ஆன நிலையில் அவரது சடலத்தை மகன் குலாம் தனது வீட்டிற்கு வெளியே புதைத்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த போலீஸார் இன்று அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

News May 9, 2024

தூத்துக்குடி மணப்பாடு கடற்கரை சிறப்பு

image

தூத்துக்குடியில் அமைந்துள்ளது மணவை என்றழைக்கப்படும் மணப்பாடு கடற்கரை. இந்த கடற்கரையில் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலுவை உள்ளது. பழமையான கடற்கரையான இந்த இடத்தில் பண்டைய வர்த்தம் செய்யப்பட்டு வந்தது. தூத்துக்குடி துறைமுகம் கட்டப்பட்ட பிறகு வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இந்த கடற்கரைக்கு அருகில் கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயம் பழமையான தேவாலயமாகும்.

News May 9, 2024

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

image

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று மாலை 6 மணி முதல் வரும் 12 ஆம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு  அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். இதன் காரணமாக அந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!