Tuticorin

News May 11, 2024

ஸ்ரீவைகுண்டத்தில் கொலை – தனிப்படை அமைப்பு

image

குரும்பூர் அருகே சேதுக்குவாய்த்தான் பகுதியில் இருந்து உடன்குடி செல்லும் பிரதான சாலையில் குடிநீர் இணைப்பு பணிகள் செய்வதற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழி தோண்டியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த குழி தற்போது வரை மூடப்படவில்லை என கூறப்படும் நிலையில் இதில் வாகன ஓட்டிகள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதை சரி செய்ய மக்கள் வலியுறுத்துகின்றனர்.

News May 11, 2024

வடிவேலு பாணியில் குழம்பி போன மக்கள்

image

சாத்தான்குளம் பகுதியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு 70 A என்ற டவுன் பஸ் தினமும் சென்று வருகிறது. இந்த பேருந்தானது ஸ்ரீவைகுண்டத்திற்கு சென்று பின்னர் சாத்தான்குளம் திரும்பும். இந்த பேருந்தில் “கருவேலம்பாடு ” என எழுதப்படுவதற்கு பதிலாக “கருநீலம்பாடு ” என ஊர் பெயர் டிஜிட்டல் பலகையில் எழுதப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் குழப்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

News May 11, 2024

குவைத் நாட்டு அருங்காட்சியகத்தில் தமிழக எழுத்தாளர்

image

தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த எழுத்தாளர் காமராசு என்பவர் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பணியில் முக்கிய பங்காற்றியவர் ஆவார். இந்த நிலையில் தற்போது அவர் குவைத் நாட்டில் அந்நாட்டின் அரசர் நடத்தும் அருங்காட்சியகத்தில் அவர் தொல்லியல் எச்சங்களை ஆய்வு செய்து அவற்றை பார்வையிட்டார்.

News May 11, 2024

ஸ்ரீவைகுண்டம்: மர்ம நபர்களால் வெட்டி கொலை

image

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள புதுக்குடி சேர்ந்த காளிமுத்து (43).குடும்ப பிரச்சனை காரணமாக இவரது மனைவி கடந்த 8 மாதங்களுக்கு முன் அவரை பிரிந்து கூட்டாம்புளியில் வசித்து வருகிறார். நேற்று இரவு வெள்ளூர் பஸ் ஸ்டாப் அருகே காளிமுத்து மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

News May 11, 2024

தூத்துக்குடியில் கன மழைக்கு வாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(மே.11) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோடை காலமாக இருந்தாலும் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிது குறிப்பிடத்தக்கது.

News May 11, 2024

ஆறுமுகநேரி அருகே நீட் தேர்வு வினாத்தாள் மாற்றம்?

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி கமலாவதி பள்ளியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதில் தேர்வு எழுதிய 350 மாணவர்களுக்கும் வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மறு தேர்வு நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 11, 2024

மாரி செல்வராஜின் படம் தூத்துக்குடியை சார்ந்ததா?

image

இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது ‘பைசன் காளமாடன்’ என்ற தலைப்பில் புதிய படத்தை எடுத்து வருகிறார். இந்த படம், தூத்துக்குடி மாவட்டம் மணத்தி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும் இவர் 1995ல் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் ஆவார்.

News May 10, 2024

மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த முன்னாள் அமைச்சர்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் விவசாய கடனை பெற்றுள்ளனர். இந்த நிலையில் அந்த விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வங்கி நிர்வாகம் அடாவடியாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

News May 10, 2024

பல்வேறு பாடங்கள் 709 மாணவர்கள் சென்டம்

image

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்கிலத்தில் ஒரு மாணவரும் ,கணிதத்தில் 453 மாணவர்களும் , அறிவியலில் 140 மாணவர்களும் ,சமூக அறிவியலில் 115 மாணவர்களும் என மொத்தம் 709 மாணவர்கள் இந்தப் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

News May 10, 2024

சாத்தான்குளம்: மே 12ல் இலவச மருத்துவ முகாம்

image

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில்  மே 12ஆம் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் வலிப்பு நோய், பக்கவாதம், நரம்பியல் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!