Tuticorin

News May 14, 2024

தூத்துக்குடி: அசனத்தில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

image

தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கடல் மாதா ஆலய 26 ஆவது ஆண்டு திருவிழா துவங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான அசன திருவிழா நேற்று(மே 13) இரவு நடைபெற்றது, இதனை ஒட்டி நடைபெற்ற சிறப்பு ஆராதனைக்கு பின்னர் நடந்த சிறப்பு அசன பொது விருந்தில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

News May 13, 2024

தூத்துக்குடி மழைக்கு வாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

News May 13, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை வகித்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். முதல் நாளை முன்னிட்டு பல ஜூஸ் உள்ளிட்ட பல்வேறு ஜூஸ் வகைகள் மற்றும் வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகளும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

News May 13, 2024

தூத்துக்குடி: மாதம் ரூ.10 லட்சம் சம்பளம்

image

தூத்துக்குடி வாகைகுளம் மதர் தெரேசா பொறியியல் கல்லூரி மாணவருக்கு பன்னாட்டு நிறுவனத்தில் ரூ.10 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. கல்லூரியில் இந்த ஆண்டு 100 சதவீத வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் கணினி துறையில் இறுதியாண்டு பயிலும் ஜெரூஸ் என்ற மாணவருக்கு பன்னாட்டு நிறுவனத்தில் ஆண்டுக்கு 10.2 லட்சம் வருமானத்தில் வேலை கிடைத்துள்ளது.

News May 13, 2024

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி வெளியிட்ட அறிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்கு கஞ்சா மற்றும் மது போதை தான் காரணம் என தனியார் பத்திரிகை ஒன்றில் செய்தியாக வெளிவந்துள்ளது. இந்த செய்தி வெளியான தகவலானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தனது மறுப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 12, 2024

தூத்துக்குடி: மீண்டும் பள்ளிக்கு போகலாம்

image

தூத்துக்குடியில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சிங்கப்பூர் மலேசியா வெளிநாடுகளில் வாழும் முன்னாள் மாணவர்கள் உட்பட 200 பேர் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் குழு புகைப்படமும் எடுத்தனர்.

News May 12, 2024

தூத்துக்குடி: நள்ளிரவில் மரணம்… சோகம்

image

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக புதுக்கோட்டை போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி இறந்தவர் யார் எந்த வாகனம் மோதி பலியானார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 12, 2024

தூத்துக்குடி அருகே ஒருவர் பலி 

image

ஓட்டப்பிடாரத்தை சேர்ந்தவர் முத்துகுமார் (41). இவர் அரசு கேபிள் டிவி ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் இன்று காலை முத்துகுமார் தோட்டப் பணிகளை மேற்கொண்டு வந்தார். அப்போது தோட்டத்தில் அறுந்து கிடந்த உயரழுத்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக முத்துகுமாா் மிதித்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News May 12, 2024

வழக்கறிஞர் கொலையில் ஆறு பேர் கைது

image

தூத்துக்குடி அண்ணா நகரில் நேற்று நள்ளிரவில் செந்தில் ஆறுமுகம் என்ற வழக்கறிஞர் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சொத்து தகராறில் செந்தில் ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்ததாக அவரது தங்கை கணவர் கோபிநாத் உட்பட ஆறு பேரை போலீசார் சற்று முன் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

News May 12, 2024

ஓட்டப்பிடாரம் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

ஓட்டப்பிடாரம் புதுப்பச்சேரியை சேர்ந்தவர் முத்துக்குமார் (28). அரசு கேபிள் டிவியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேறு இவர் தனது தோட்டத்தில் பருத்திச் செடிக்கு மருந்து அடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு கிடந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!